ஒற்றைப் பத்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 20, 2022

ஒற்றைப் பத்தி

தேவநாதன் பரம்பரை

கேள்வி: பெண்கள் ஆபாசமாக உடை அணிவது அவர்களின் உரிமையா?

பதில்:  ஆபாச உடை அவர்களது ஆசை. அந்த ஆசையின் வெளிவேசம் உரிமை.

‘துக்ளக்', 21.9.2022, பக்கம் 13

பெண்கள் என்றாலே அவர்கள் விடயத்தில் தலையிட்டு, அவர்களை இழிவுபடுத்துவது - கொச்சைப்படுத்துவது என்பதில் இந்தப் பார்ப்பனக் கூட்டத்துக்கு அலாதி பிரியம் - வெறி!

30 சதவிகித பெண்கள்தான் பெண்மைத் தன்மை உள்ளவர்கள் என்று கூறி, ‘துக்ளக்' குருமூர்த்தி அய்யர் வாங்கிக் கட்டிக் கொண்டது போதாதா? அதற்குப் பிறகும் ஒழுங்கான புத்தி வந்திருக்கவேண்டாமா?

பெண்கள் உடை உடுத்துவதுபற்றி எழுதுகோல் பிடிக்கும் குருமூர்த்தி அய்யர் கூட்டம் இவர்களின் கோவில்களிலும், தேர்களிலும் சிற்பம் என்ற பெயரால் வடித்து வைத்திருக்கும் ஆபாச சாக்கடைபற்றிப் பேசுவார்களா?

நெல்லை மாவட்டம் களக்காடு என்னும் ஊருக்குத் தந்தை பெரியார் சென்றார் - அதுபற்றி தந்தை பெரியாரே கூறுகிறார்:

‘‘சகோதரர்களே!  களக்காடு ஊரின் தேரையும், கோபுரத்தையும் பார்க்கும்படிக் கூப்பிட்டதினால் சென்றோம் - அங்கு பார்த்த  ஆபாசங்களை சொல்ல வெட்கப்பட வேண்டியதாய் இருக்கிறது.

மனிதப் பெண்ணை கழுதை சம்போகம் பண்ணுவதுபோலும், இதுபோன்ற மற்றும் பல உருவங்களைச் சித்தரித்து வைத்திருப்பதை எப்படி ஒப்புக்கொள்வது?'' என்று அதே களக்காட்டில் (23.12.1930) தந்தை பெரியார் பேசினாரே! (‘குடிஅரசு', 1.2.1931).

மத்தூர் கோவிலில் வல்லபை கணபதி சிலையைப்பற்றி என்ன சொல்ல! விநாயகன் தன் தும்பிக்கையால் ஒரு பெண்ணின் குறியில் அடைப்பது போன்ற சிலையை விழுந்து கும்பிடும் கூட்டம், பெண்கள் அணியும் ஆடையைப்பற்றி எல்லாம் பேசலாமா? காஞ்சிபுரம் தேவநாதன் பரம்பரையினர் ஆபாசம்பற்றி எல்லாம் பேசக்கூடாது! 

-  மயிலாடன்


No comments:

Post a Comment