கடத்தூரில் கழகப் பொதுக்கூட்டம், விடுதலை வாசகர் வட்ட கூட்டத்தைத் தொடர்ந்து நடத்துவது என முடிவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 26, 2022

கடத்தூரில் கழகப் பொதுக்கூட்டம், விடுதலை வாசகர் வட்ட கூட்டத்தைத் தொடர்ந்து நடத்துவது என முடிவு!

தருமபுரி, செப். 26- தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றிய திராவிடர் கழகம், விடுதலை வாசகர் வட்ட கலந்துரையாடல் கூட்டம் 24.9.2022 தமிழ்ச்செல்வி அச்சகத் தில் ஒன்றிய கழகத் தலைவர்     பெ. சிவலிங்கம் தலைமையில் நடை பெற்றது.

ஒன்றிய செயலாளர் வெ.தன சேகரன் வரவேற்புரையாற்றினார். மண்டல மாணவர் கழக செயலா ளர் இ.சமரசம் கடவுள் மறுப்பு கூறினார். மாவட்ட செயலாளர் பீம.தமிழ்பிரபாகரன், மாவட்ட  ஆசிரியரணி செயலாளர் மு.பிர பாகரன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் மா.செல்ல துரை, இரா.நெடுமிடல், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் வ.நட ராஜன்,   மாணவர் கழக மண்டல செயலாளர் இ.சமரசம், தருமபுரி விடுதலை வாசகர் வட்ட தலைவர் க.சின்னராஜ்,  மாவட்ட திமுக ஆதி திராவிடர் நல குழு அமைப்பாளர் கோ.குபேந்திரன்,  ஆகியோர் முன் னிலை ஏற்றனர். 

கூட்டத்தில் நோக்கத்தைப் பற்றி கழக மண்டல தலைவர் அ.தமிழ்ச் செல்வன் தொடக்க உரை யாற்றினார். 

மாநில  கலைத்துறை செயலா ளர் மாரி. கருணாநிதி, மாவட்ட இளைஞரணி தலைவர் த.யாழ்திலீபன் ஆகியோர் கருத்துரையாற் றினார். 

இறுதியாக மாவட்ட கழகத் தலைவர்  வீ.சிவாஜி சிறப்புரையாற் றினார்.  

தீர்மானம் 1: பாப்பிரெட்டிப் பட்டி நகர கழகத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் க.திராவிட முத்து மறைவுக்கு ஒன்றிய திரா விடர் கழகம் வீரவணக்கத்தை செலுத்துகிறது.

தீர்மானம் 2: அக்டோபர் மாதம் கடத்தூரில் மாவட்ட மகளிரணி சார்பில் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, மாநில மகளிர் பாசறை செயலாளர் சே.மெ.மதிவ தனி ஆகியோரை அழைத்து சிறப் பான வகையில் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும், அக்டோபர் 16 ஆம் தேதி தாளநத்தம் கிராமத் தில் கழக சொற்பொழிவாளர் பெரியார்செல்வன் வைத்து கிராம பிரச்சார பொதுக் கூட்டத்தை நடத்துவது எனவும் முடிவு செய் யப்படுகிறது.

தீர்மானம் 3: கடத்தூரில் இதுவரை சிறப்பாக நடைபெற்று வந்த விடுதலை வாசகர் வட்ட கூட்டத்தை மீண்டும் தொடர்ந்து மாதம் தவறாமல் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4: திராவிடர் முன் னேற்றக் கழக துணை பொது செய லாளர் அ.இராசா அவர்கள் பேசிய பேச்சை மதவாத சக்திகள் திரித்தும் பொய்யை புனைந்தும் வீண் பழி சுமத்தி  மிரட்டி வருவதை கண்டிப்பதுடன், அவருக்கு திராவிடர் கழகம் துணை நிற்கும் என தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 5: தமிழ்நாடு அரசு மீதும், தமிழ்நாடு முதலமைச்சர் மீதும் சிறப்பாக நடைபெற்று வரும் திராவிட. மாடல் ஆட்சி மீதும் வீண் பழி சுமத்தி தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தலாம் என முயற்சிக்கும் மதவாத பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ். சக்திகளை ஒன்றிய திராவிடர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது .போன்ற தீர்மானங் கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட் டன. இறுதியாக விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.தனசேகர் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment