ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 2, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, மற்றும் தேர்தல் வர இருக்கும் மாநிலங்களான குஜராத், கருநாடகா, இமாச்சல் பிரதேச விவசாய அமைப்புகளை தெலங்கானா முதல மைச்சர் கே.சந்திரசேகர ராவ் சந்திக்க முடிவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இந்திரா காந்தி தேசிய கலை மய்யம் - இந்து ஆய்வுகள், பாரதிய ஞான பரம்பரை, இந்திய இலக்கியம் மற்றும் அருங்காட்சியகம் ஆகிய பாடப்பிரிவுகளுடன் இந்த ஆண்டு முதல் ராமாயணம், மகாபாரதம், வேதங்கள் கற்பிக்க திட்டமிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கருநாடகா மாநிலம் சித்ரதுர்காவில் முருகா மடத்து சாமியார் டாக்டர் சிவமூர்த்தி முருகா சரணரு கைது.

* உ.பி.யில் யோகி அரசின் ஓபிசி உத்தரவை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது. எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமை களுக்காக சட்டசபையிலும், தெருக்களிலும் போராடப் போவதாக சபதம்.

தி டெலிகிராப்:

* ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள் வெடி குண்டு தயாரிக்கும் பயிற்சிக்கு ஏற்பாடு செய்ததாகவும், நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளை நடத்தியதாகவும், அதற்கு முஸ்லிம்கள் மீது பழி சுமத்துவதாகவும், இது “2014 மக்களவைத் தேர்தலில் அவர்களுக்கு உதவியது” என்று கூறப்படும் மேனாள் ஆர்.எஸ்.எஸ்.காரர் யஷ்வந்த் ஷிண்டே அளித்த பிரமாணப் பத்திரத்தை காங்கிரஸ் பதிவேற்றியுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* பல்கலைக்கழக சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2022 கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இது சட்டமாக மாறியதும், மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனத்தில் வேந்தரின் (ஆளுநர்) அதிகாரங்கள் குறைக்கப்படும்.

.- குடந்தை கருணா


No comments:

Post a Comment