தஞ்சையில் சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 27, 2022

தஞ்சையில் சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு

தஞ்சை, செப். 27- சுயமரியா தைச் சுடரொளிகள் உரத்த நாடு கை. இ.கைலாச முத்து, பேபி.கு. ரெங்க சாமி, பேபி .ரெ.பாப்பம் மாள், அ.இராமச்சந்தி ரன், இரா. இராசம்மாள், தூ. நீலமேகம் ஆகியோ ரின்இருபத்தி இரண் டாம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம் 26.9.2022 அன்று தஞ்சையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட திராவிடர் கழகத் தலை வர் வழக்குரைஞர் சி.அமர் சிங் தலைமை வகித்தார்.

கழக சொற்பொழிவா ளர் இரா. பெரியார் செல் வன், ஒரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகத் தலை வர் த. செகநாதன் , தஞ்சை மாநகர செயலாளர் டேவிட், மாநகர தலைவர் நரேந்திரன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலா ளர் நெல்லுப்பட்டுஅ. இராமலிங்கம், ஆகியோர் நினைவேந்தல் உரையாற் றினார்கள்.

கழக பொதுச்செயலா ளர் இரா.ஜெயக்குமார் தொடக்க உரையாற்றினார்.

கிராம பகுத்தறிவுப் பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி.க. அன்பழகன்  "மனித வாழ்வின் பெருமை எது" என்ற தலைப்பில்  சிறப்புரை ஆற்றினார்.

தொடக்கத்தில் பேராசிரியர் கை. மு. அறி வுச்செல்வன் வரவேற்பு ரையாற்றினார் இறுதி யில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் நன்றி கூறினார். 

திராவிட மாணவர் கழக மாநில அமைப்பா ளர் பொறியாளர் இரா. செந்தூரப்பாண்டியன் இணைப்புரை வழங்கி னார். 

நிகழ்ச்சியில் பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநிலசெயலாளர் நா.இராமகிருட்டிணன், உரத்தநாடு ஒன்றிய கழக செயலாளர் மாநல்.பரம சிவம், பகுத்தறிவு ஆசிரி யர் அணி மாவட்ட தலை வர் ந.சங்கர், தஞ்சை மாந கர அமைப்பாளர் வன் னிப்பட்டு செ.தமிழ்ச் செல்வன்,  உரத்தநாடு ஒன்றிய விடுதலை சந்தா வசூல் குழு தலைவர் பொறியாளர் பாலகிருட் டிணன், மாநகர பகுத்தறி வாளர் கழக பொறுப் பாளர் சாமி. கலைச் செல்வன்,அமிர்தா புத்தக நிலைய உரிமையாளர் மா.திராவிடச்செல்வன், உரத்தநாடு ஒன்றிய மேற்கு பகுதி செயலாளர் புலவர்.இரா.மோகன் தாசு, தஞ்சை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல்வம்,  வேர்ட்ஸ் வொர்த் பெரியார்மணி, திராவிட மாணவர் கழக துணைத் தலைவர் ச.சிந் தனை, பெரியார் மணி யம்மை பல்கலைக் கழக மாணவர் கழக அமைப்பா ளர் இர.நிலவன், கண்ணை கிழக்கு திருநாவுக்கரசு, வடுவூர் கனகசபாபதி, வெள்ளூர் முருகேசன், தஞ்சை மா.இராசராசன் உள்ளிட்டோர் பங் கேற்று சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment