தந்தை பெரியார்- அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கருத்தரங்கம் - மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி தஞ்சை மாவட்ட ப.க. கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 16, 2022

தந்தை பெரியார்- அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கருத்தரங்கம் - மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி தஞ்சை மாவட்ட ப.க. கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

தஞ்சை,செப்.16-தஞ்சாவூர், கீழராச வீதி, பெரியார் இல்லத்தில் 13.09.2022 செவ்வாய் மாலை 6 மணி அளவில்  மாவட்ட பகுத் தறிவாளர் கழக  கலந்துரையாடல் கூட்டம்  மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி தலைமையில் நடை பெற்றது, மாவட்ட ப.க. துணைத் தலைவர் ஜெ.பெரியார் கண் ணன் வரவேற்று உரையாற்றினார். 

மாநில ப.க.  துணைத் தலை வர் கோபு பழனிவேல், கூட்டத் தின் நோக்கம், அமைப்பின் செயல்பாடுகள் பற்றி தொடக்க உரையாற்றினார்.

கூட்டத்திற்கு மண்டல கழக தலைவர் மு.அய்யனார், மாவட்ட ப.க. ஆசிரியரணி அமைப்பாளர் பேராசிரியர் முனைவர் இரா .மணிமேகலை, மாநகர ப.க.தலை வர்  பொறியாளர் ப.மனோகரன், மாவட்ட ப.க.இலக்கிய அணி தலைவர் வெ.நாராயணசாமி, ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

 தொடர்ந்து, ந.காமராசு, பெரியார் தொண்டர் நா.இரா மையன், இரா.வீரகுமார், மாவட்ட ப.க.துணைச் செயலாளர் கவிஞர் தங்க . வெற்றிவேந்தன், மாநகர ப.க.அமைப்பாளர் சாமி .கலைச்செல்வன், மு.வெற்றி மாறன், திருவோணம் ஒன்றிய ப.க.அமைப்பாளர் சி.நாகநாதன், சுப.சரவணன், ஆகியோர் உரைக் குப் பின்,  மாநில கிராம பகுத் தறிவுப் பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், மாநில ப.க. ஊடகத்துறை தலை வர் மா.அழகிரிசாமி, ப.க. பொதுச் செயலாளர் வி.மோகன் ஆகியோர் இயக்கத்தின் செயல் பாடுகள், உறுப்பினர் சேர்க்கை, இதழ்களுக்கு சந்தா சேர்ப்பு போன்ற ஆக்கப் பணிகள் பற்றி கருத்துரை யாற்றினார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டத் தீர்மானங்களை மாவட்ட ப.க.செயலாளர் பாவலர் பொன் னரசு வாசித்தார்.

தீர்மானம் 1:

செப்டம்பர்-17 தந்தை பெரியார் 144 -ஆவது பிறந்த நாள் விழாவை சமூகநீதி நாளாகவும், செப்டம் பர்-15 அறிஞர் அண்ணா 114-ஆவது பிறந்த நாளையும் சிறப் பாகக் கொண்டாடி மகிழ்வ தென முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம்:2

கடந்த 04-09-2022இல் திருச்சி யில் நடைபெற்ற மாநில ப.க. கலந்துரையாடல் கூட்டத் தீர் மானங்களுக்கு செயலாக்கம் தரு வது என முடிவு செய்யபடுகிறது.

தீர்மானம் 3:

தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல் லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நேரடி நிகழ்வாக  நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 4:

தந்தை பெரியார்- அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன் னிட்டு மாவட்ட அமைப்பின் சார்பில் கருத்தரங்கம் நடத்து வது முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 5:

தஞ்சையில் வரும் 24ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பட ஊர்வலம் நடைபெறு தில் ப.க. தோழர்களையும், முற்போக்குச் சிந்தனையாளர்களையும் அதிக அளவு பங்கேற்க வைப்பது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 6:

செப்டம்பர் - 17 தந்தை பெரியார் பிறந்த நாளினை "சமூக நீதிநாள்" என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட உறுதி மொழி ஆணையை அச்சிட்டு பரப்பிடு வது என முடிவு செய்யப்படுகிறது.

இறுதியில் மாவட்ட ப.க. இணைச் செயலாளர் ஆ.லெட்சு மணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment