கடுமையான குற்றவாளிகள் தேர்தலில் நிற்கத் தடை ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 29, 2022

கடுமையான குற்றவாளிகள் தேர்தலில் நிற்கத் தடை ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது

புதுடில்லி. செப்.29 கடுமையான குற்றம் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிட தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பி உள்ளது. 

கடுமையான குற்றங்கள் செய்து அதற்காக நீதிமன் றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்கக்கேட்டு பா.ஜனதாவை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்குரைஞர்  உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கும், தேர்தல் ஆணை யத்துக்கும் உத்தரவிடுமாறு அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த பொதுநல மனுவை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு விசாரித்தது. 

அப்போது, இந்த மனுவில் எதிர்மனுதாரர்கள் யார்? யார்? என மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, தேர்தல் ஆணையம், ஒன்றியஉள்துறை அமைச்சகம், ஒன்றியசட்ட அமைச்சகம், சட்ட ஆணையம் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உள்ளதாக மனுதாரர் அஸ்வினி உபாத்யாய் பதிலளித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கடுமையான குற்றங் களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நபர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்ககோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையம்  மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சகம், ஒன்றிய சட்ட அமைச்சகம், சட்ட ஆணையம் ஆகியவற்றுக்கு தாக்கீது அனுப்ப உத்தர விட்டனர்.


No comments:

Post a Comment