தமிழர் தலைவரைக் காணும் ஆர்வத்துடன் கோட்டைப்பட்டினம் மீனவக் குடும்பங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

தமிழர் தலைவரைக் காணும் ஆர்வத்துடன் கோட்டைப்பட்டினம் மீனவக் குடும்பங்கள்!

திராவிடர் கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜெகதாப்பட்டினம், கீழ மஞ்சக்குடி ச.குமார் - சுவாதி ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை 14-09-2022 அன்று காலை 10.30 மணிக்கு கோட்டைப்பட்டினம் எம்.கே.ஏ.  நிஷா திருமண மண்டபத்தில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் தலைமையேற்று நடத்தி வைக்கவுள் ளார்கள்.

முன்னேற்பாட்டு பணிகளுக்காக 11.9.2022 அன்று மதியம் பேராசிரியர் ந.எழில ரசன், மாநில இளைஞரணி துணைச் செய லாளர் இரா.வெற்றிக்குமார், தஞ்சை மண் டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி ஆகியோருடன் சென்றிருந்தோம். 

மணவிழா நடைபெறும் கோட்டைப் பட்டினம் எம்.கே.ஏ.  நிஷா திருமண மண்ட பத்தை பார்வையிட்டு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பிறகு மணமகன் குமார் இல்லம் சென்று அவரது தாயார் செபஸ்தியம்மாள், சகோதரி சத்தியா, சகோதரி மகள் பகுத்தறிவு ஆகி யோரை சந்தித்தோம்.

மிக சாதாரணமான எங்கள் குடும்ப திருமணத்தில் தலைவர் கலந்துகொள்வது எங்களுக்கு எல்லையில்லா மகிழ்வை தருகிறது என்று மகிழ்வுடன் தெரிவித்தனர்.

சில மணித் துளி ஆலோசனைக்குப் பிறகு அன்புடன் விடை பெற்றோம்.

பிறகு கிராமத் தலைவர் பல்தசார் அவர்களை சந்தித்தோம்  மகிழ்ச்சியுடன் வரவேற்ற அவர் "தமிழ்நாட்டின் மாபெரும் தலைவர் எங்கள் ஊருக்கு வருவது எங் களுக்கு பெருமை, எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் கிராமம் சார்பில் தலைவரை வரவேற்க உள்ளோம்" என்றார்.

"தலைவர் வருவதால் அவருக்கு மதிப்பளித்து  திருமணத்தில் எங்கள் கிராம வழமையான சடங்குகளை எல்லாம் நாங் கள் தவிர்த்துவிட்டோம்" என்றார்.

மீனவர் சங்கத் தலைவர் பாலகுமாரை சந்தித்தோம். அவரும்  "தமிழ்நாட்டின் மூத்த தலைவர் எங்கள் பகுதிக்கு வருவதை பெருமையாக கருதுகிறோம். மீனவர் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்க உள்ளோம்" என மகிழ்வுடன் தெரிவித்தார்.

பிறகு மணமகள் சுவாதி இல்லத்திற்கு சென்றோம். மணமகளின் தந்தையார் அரு ளாந்து-தாயார் சகாயமேரி, சகோதரர்-தாஸ், அவரது பாட்டி ஆகியோர் வாஞ்சையுடன் வரவேற்றனர்.

"எங்கள் பகுதிக்கு தலைவர் இதுவரை வந்தாக தெரியவில்லை எங்கள் இல்ல மண விழாவிற்கு தலைவர் வருவது பெரும் மகிழ்வை தருகிறது. மணவிழாவினை எப்படி உங்கள் முறைப்படி நடத்த வேண் டுமோ தலைவர் வருவதால் எந்த சங்கடமும் இல்லாமல் நடத்துங்கள். நாங்கள் முழு ஒத்துழைப்பு தருகிறோம்" என்று முகமலர்ச் சியுடன் தெரிவித்தனர்.

தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க, சிபிஅய், சிபிஎம், அதிமுக .இஸ்லாமிய அமைப்புகள் அனைவரும் தங்கள் பகுதிக்கு ஆசிரியர் வருவதை கட்சி. ஜாதி, மதங்களை கடந்து பெரும் மகிழ்வாக கருதுகின்றனர்.

அதிகம் நமது பிரச்சாரம் இல்லாத அந்த பகுதிக்கு ஆசிரியர் வருவதை மகிழ்வாக, பெருமையாக கருதும் நிலையை பார்க்கும் போது எங்களை நெகிழச் செய்தது.

எந்தவித கள்ளம் - கபடம் இல்லாத அந்த எளிமையான, சாதாரண மக்கள் நமது தலைவர் முகத்தை நேரில் காண இருப்பதில் எத்தனை மகிழ்ச்சியடைகிறார்கள். அந்த மக்களை சந்தித்ததில் நாங்கள் பெரும் மகிழ்வை பெற்றோம்.

அந்தப் பகுதிக்கு அதிகம் செல்லாத நமது தலைவர் ஆசிரியர் அவர்கள் மீது இவ்வளவு பாசம், மரியாதையை அந்த பகுதி மக்கள் வைத்திருப்பது எங்களை நெகிழச்செய்தது   தந்தைபெரியாருக்கு பின் இந்த இயக்கத்தை, இனத்தை வழி நடத்தும் நமது தலைவர் ஆசிரியர் வீரமணி அய்யா அவர்கள் - அவரின் கடின உழைப்பால், அணுகுமுறையால், ஆற்றலால் அடித்தட்டு மக்களின் மனதில் எந்த அளவு நிறைந்து உள்ளார் என்பதை பார்க்கும்போது,  நாம் இன்னும் உழைக்க வேண்டும் என்ற உந்து தலையும், ஊக்கத்தையும், உணர்வையும் பெறுகிறோம்.  

நன்றி அய்யா !

உங்கள் உழைப்பு வீண்போகவில்லை.

அன்புடன்

இரா.ஜெயக்குமார்

பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்


No comments:

Post a Comment