இன்புளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் மா.சுப்பிரமணியன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 26, 2022

இன்புளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் மா.சுப்பிரமணியன்

சென்னை,செப்.26- இன்புளூயன்சா வைரஸ் காய்ச் சலால் பாதிக்கப்பட்ட வர்கள் முகக் கவசம் அணிவது அவ சியம் என தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ் வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அவர் கூறியதாவது: 

தமிழ்நாட்டில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏறத்தாழ ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் தயாராக உள்ளன. அதேபோல் காய்ச்சலுக்கு என ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் தற்போது பரவி வரும் இன்புளூயன்சா காய்ச்சலால் (எச்1 என்1 வைரஸ்) பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 465 ஆகும். இதில் 5 வயதுக்கு உட்பட்ட 81 குழந்தைகளும், 5-14 வயதுக்கு உட்பட்டவர்களில் 62 பேரும், 15-65 வயதுக்கு உள்ளானவர்கள் 223 பேரும், 65 வயதுக்கு மேற்பட்டோர்களில் 99 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 10 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 269 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 186 பேர் தங்களது வீடுகளிலும் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைவலி, உடல்வலி, காய்ச்சல், இருமல் அறிகுறி களுடன் 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே இந்த வைரசின் தாக்கம் பாதிப்பை உண்டாக்குகிறது. அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டாலே அது போதும். அதற்கு முன்பு மருத்துவர்களின் ஆலோசனை பெற வேண்டும். இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் முகக் கவசம் அணிவது அவசியம். அய்ரோப்பிய நாடுகளில் இன்புளூ யன்சா காய்ச்சலுக்கு என தனி தடுப்பூசிகள் போடப் படுகிறது. அதேபோல் உலகில் 10-க்கும் மேற்பட்ட நாடு களில் கரோனாவிற்கு என 5-ஆவது தடுப்பூசி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். 

கடந்த 4 நாட்களில் தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 193 சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் 10 லட்சத்து 89 ஆயிரத்து 529 பேர் பயன் அடைந் திருக்கின்றனர். கடந்த 2 மாதங்களாகவே தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு என்பது பெரிதாக இல்லை. நாளொன் றுக்கு 400-ல் இருந்து 500-க்குள்தான் பாதிப்பு எண்ணிக்கை இருந்து வருகிறது. இதனால் பதற்றமடைய தேவையில்லை. 

டெங்கு பாதிப்பை பொறுத்தவரை 352 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். 

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment