நம்மை பாதுகாக்கும் துப்பாக்கி..! பெரியார்..!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

நம்மை பாதுகாக்கும் துப்பாக்கி..! பெரியார்..!!

  அன்பினை 

 அற நெறியாக்கி! 

 தனது   அறிவினை, 

 ஆதிக்கத்தை வீழ்த்தும்

 ஆயுதமாக்கி!

 மனித நேயத்தை 

 தனது  கொள்கையின் 

 மய்ய கருவாக்கி!

 எதிர்ப்பையும் 

 ஏளனத்தையும் 

 ஏற்றம் தரும் எருவாக்கி!

 உலகில் 

 பகுத்தறிவுப் பாதையை

 தனக்கென 

 தனித் தன்மையோடு 

 உருவாக்கி!

 இன நலம், 

 இனமானம் 

 இரண்டையும் 

 இலட்சிய

 இலக்காக்கி!

 விடுதலை ஏட்டை 

 நமக்கான 

 கை விளக்காக்கி!

 நம்மை 

 சூழ்ந்திருந்த 

 இருளையும் 

 மருளையும் நீக்கி!

 படமெடுத்தாடிய 

 சனாதன 

 ஜாதிய பாம்பை ,

 தனது 

 தடிகொண்டு தாக்கி!

 வேதம் கற்பித்த

 பேதத்தை,

 பெண் 

 அடிமைத் தனத்தை 

 அடியோடு போக்கி!

 நம்மை  மானமும் அறிவும் 

 உடைய  மக்களாய் ஆக்கி!

 சமூகத்தில்   சமத்துவத்தையும் 

 சமூக நீதியையும்

 காவிரி நீராய் தேக்கி!

 வெற்றி கண்ட 

 தந்தை  பெரியாரை 

 நோக்கி! நோக்கி..!!

 இளைஞர்களின் 

 பட்டாளம்! 

 வருகுதுபார் ஏராளம்!

 இதைவிட, 

 பெரியார் 

 செய்ய வேண்டியது 

 வேறு என்ன பாக்கி!

 காரணம்!

 பெரியார் 

 நம்மை 

 பாதுகாக்கும் துப்பாக்கி!

 ஆம்..!

 நாம் கையில் 

 ஏந்த வேண்டிய  துப்பாக்கி..!

 பெரியார்..! பெரியார்..!!

 வாழ்க பெரியார்..!!

- சிற்பி சேகர், பட்டுக்கோட்டை


No comments:

Post a Comment