அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு அளித்த தமிழ்நாடு முதலமைச்சர், மருத்துவத்துறை அமைச்சருக்கு சேவை மருத்துவர்கள் நல சங்கம் நன்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 26, 2022

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு அளித்த தமிழ்நாடு முதலமைச்சர், மருத்துவத்துறை அமைச்சருக்கு சேவை மருத்துவர்கள் நல சங்கம் நன்றி!

சென்னை, செப். 26- அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிமணியம் அவர்களுக்கும் மருத்துவர் கள் நல சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சேவை மருத்துவர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் சுரேஷ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

டாக்டர்கள் சங்கத்தின் ஊதியம்/அலவன்ஸ் உயர்வு கோரிக்கைகள் பல முறை வேண்டி அய்ந்து ஆண்டாக இழுத்தடிக்கப்பட்டு பின், எங்கள் கோரிக்கைகளை ஏற்று தற்போதைய நிதி நெருக்கடியிலும் புதிய அரசானது பரிசீலனை செய்து 293 அரசாணை 18.06.2021 தேதி அன்று வெளியிட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கும் தமிழ்நாடு மருத்துவ துறை அமைச்சருக்கும் நன்றிகள்.

ஆனால் இன்றுடன் 1 1/4 ஆண்டு நிறைவடைந்தும் ஓரிரு இடங்களை தவிர வேறெங்கும் இந்த அரசனை 293 அமல் படுத்தப்படாமல் உள்ளது.

இதன் மூலம் மருத்துவர்கள் நிலுவை தொகையாக மட்டுமே ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான இழப்பை சுமந்து வருகின்றனர். கூடவே கடந்த 3 ஆண்டு களாக சிறப்பு/உயர் சிறப்பு மருத்துவர்கள் வீஸீநீக்ஷீமீனீமீஸீt தொகை யையும் இதனால் இழக்கின்றனர்.

ஆகவே அரசு இனியும் கால தாமதம் செய்யாமல் 293 நி.ளி. வை உடனடியாக அமல்படுத்த உத்தரவு இடுமாறு மருத்துவ துறை அமைச்ச ரையும் மருத்துவர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் போராட்டம்

கொழும்பு,செப்.26- இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொரு ளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. பொருளாதார நெருக் கடியால் பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தது. இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளானார்கள். இதையடுத்து அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கையில் போராட் டக்காரர்கள் தங்களின் போராட்டங்களை தீவிரப்படுத்தி னார்கள். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். ரணில் விக்ரமசிங்கே புதிய அதிபராக பதவி ஏற்றார். அதன்பிறகு இலங்கையில் போராட்டங்கள் ஓய்ந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 

ஆனாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இலங் கையில் தற்போது மீண்டும் போராட்டங்கள் தலைதூக்கி உள்ளன. கொழும்பு நகரின் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலையமாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதற்கு அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதையடுத்து இலங்கையில் மீண்டும் போராட்டங்கள் தொடங்கி உள்ளன. சோசியலிச இளைஞர் சங்கத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள் கொழும்பு சுகாதார அமைச்சக கட்டடத்தின் அருகே பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது அவர்களை தடுக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. மேலும் தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து சிதறி ஓடினார்கள். இதேபோல் கொழும்பு, மருதானை, பீம்ஸ் ஆகிய இடங்களிலும் இளைஞர்கள் பேரணி நடத்த முயன்றனர். இதுதொடர்பாக 4 பெண்கள் உள்பட 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment