கட்டுமானத் தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சம் நிதி உதவி தொழிலாளர் உதவி ஆணையாளர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 14, 2022

கட்டுமானத் தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சம் நிதி உதவி தொழிலாளர் உதவி ஆணையாளர் தகவல்

சென்னை, செப். 14- கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையாளர் முருகே சன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு அரசின் உத்தரவின்பேரில் தொழி லாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் தமிழ்நாடு கட்டு மான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர் களுக்கு வீடு கட்டுவதற்கு நிதி வழங்கப்படுகிறது. இதில் சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால், அவர்க ளாகவே வீடு கட்டிக் கொள்வதற்கு நிதி உதவி வழங்குவது அல்லது தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கெனவே கட்டப் பட்டு உள்ள குடியிருப்பு களில் ஒதுக்கீடு பெற நிதி உதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத் தின்படி கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் கள் நல வாரியத்தில் பதிவு பெற்று 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து புதுப் பித்து உள்ள தொழிலா ளர்களாக இருக்க வேண் டும். தகுதியான கட்டுமான தொழிலாளர் சொந்த வீட்டுமனை வைத்து இருந்தால், 300 சதுர அடி அல்லது 28 சதுர மீட்டர் அளவில் வீடு கட்டுவதற் கான இடவசதி இருக்க வேண்டும் அல்லது தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கெனவே கட்டப் பட்டு உள்ள குடியிருப்பு களில் ஒதுக்கீடு பெற நிதி உதவி ரூ.4 லட்சம் வரை வழங்கப்படும். இதில் பயன்பெறும் கட்டுமான தொழிலாளருக்கோ, அவரது குடும்பத்தின ருக்கோ சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்கக் கூடாது. வேறு எந்த ஒன்றிய, மாநில அரசுகள் சார்ந்த இலவச வீட்டு வசதி திட்டத்தில் பயன் பெற்றிருக்க கூடாது. கட் டுமான தொழிலாளியின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். சொந் தமாக வீடு கட்ட விரும் பும் தொழிலாளர்களின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினருடன் இணைந்ததாகவோ பட்டா இருக்க வேண்டும். எந்தவித சட்ட சிக்கல்க ளும், வில்லங்கமும் இருக்க கூடாது. நிலத்தின் உரிமைக்கான பட்டா முறையாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் தொழிலாளர்கள் தங்க ளது வாரிய உறுப்பினர் பதிவு அட்டை, ஆதார் அட்டை, குடும்ப உறுப் பினர்களின் ஆதார் அட்டை, உணவப் பங் கீட்டு கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், ஒரு ஒளிப்படம், வருமான வரி சான்றிதழ் ஆகியவற்றுடன்  www.tnuwwb.tn.gov.in  என்ற இணையதளத்தில் விண் ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஈரோடு சென்னிமலை ரோடு அரசு அய்.டி.அய்.க்கு அருகில் உள்ள ஒருங் கிணைந்த தொழிலா ளர் துறை அலுவலக வளாகத் தில் செயல்படும் தொழி லாளர் உதவி ஆணையா ளர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தை அணுகலாம். 0424- 2275591, 0424-2275592 ஆகிய தொலைபேசி எண் களில் தொடர்பு கொள்ள லாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் உதவி ஆணையாளர் முரு கேசன் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment