எச்சரிக்கை! தனியாரின் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளில் 47.1 சதவிகிதம் அங்கீகரிக்கப்படாதவை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 9, 2022

எச்சரிக்கை! தனியாரின் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளில் 47.1 சதவிகிதம் அங்கீகரிக்கப்படாதவை!

புதுடில்லி, செப். 9- இந்தியாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு  தனியார் மருத்துவமனை களில் பயன்படுத்தப்பட்ட ஆன்டிபயாட்டிக் மாத்தி ரைகளில், 47.1  சதவிகித மாத்திரைகள் அங்கீகரிக் கப்படா தவை என ஆய் வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழ கம் மற்றும் பப்ளிக் ஹெல்த் பவுண்டேஷன் ஆப் இந்தியா (The Public Health Foundation of India - PHFI)இணைந்து, கடந்த 2019-ஆம் ஆண்டு தனியார் மருத்துவ மனை களில் பயன்படுத்தப்பட்ட ஆன்டி பயாட்டிக் மாத்தி ரைகள் குறித்த ஆய்வை மேற்கொண்டன. 5 ஆயிரம் நோய் எதிர்ப்பு மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களைச் சேர்ந்த 9 ஆயிரம் மொத்த விற் பனையாளர்களிடம் இந்த  ஆய்வு நடத்தப்பட் டது. அதன் முடிவில், பிர பல மருத்துவ இதழான லான்செட்டில் (லிணீஸீநீமீt) தற்போது வெளியிடப் பட்டுள்ளன. அதில், கடந்த 2019-ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனை களில், இந்திய அரசு உரிய அங்கீகாரத்துடன் வழங் கும் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் 49 சத விகிதமும், மத்திய  மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணை யத்தால் அங்கீகரிக்கப் படாத ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் 47.1 சதவிகி தமும் பயன் படுத்தப்பட் டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அங்கீகரிக் கப்படாத ஆன்டி பயாட் டிக் மாத்திரைகளில், செஃபா லோஸ்போரின்ஸ், மேக்ரோலைட்ஸ், பென்சிலின் ஆகியவை அதி களவு பயன் படுத்தப்பட் டதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்தியாவில் மக்க ளின் உடலில் உள்ள இயற்கையான எதிர்ப் பாற்றலை குறைப்பதில், அங்கீகரிக்கப்படாத ஆன்டிபயாட்டிக் மாத்தி ரை களின் பயன்பாட்டுக்கு முக்கியப்பங்கு உள்ளதா கவும், இதுபோன்ற அங் கீகரிக்கப்படாத ஆன்டி பயாட்டிக் மாத்திரைக ளின் உற்பத்தி மற்றும் விற் பனை அதிகரிப்பதால், அரசால் அங்கீகரிக்கப் பட்ட ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளின் விற் பனை பாதிக்கப்படுவதா கவும் தெரிவிக்கப் பட்டுள் ளது. அரசு மருத்துவ மனைகள், முகாம்களில் விநியோகிக்கப்பட்ட மருந்துகள் ஆய்வில் எடுத் துக் கொள்ளப் படவில்லை. இந்தியாவில் பயன்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு மருந்து களில் 85-90 சதவிகித மருந்து கள் தனியார் நிறு வனங்களால்தான் தயா ரிக்கப் படுகின்றன என் பது குறிப்பிடத்தக்கது. 

இதில், இந்தியாவில் கடந்த 2019-ஆம் ஆண் டில் அதிகளவிலான ஆன் டிபயாட்டிக் மருந்தாக அசித்ரோமைசின் 500 மிகி 7.6 சதவிகிதமும், செபிக்சிம் 200 மி.கி. 6.5 சதவிகிதமும் மக்களால் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment