தமிழ்நாட்டில் மேலும் 426 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

தமிழ்நாட்டில் மேலும் 426 பேருக்கு கரோனா

சென்னை, செப். 13- தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 426 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 426 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 74 ஆயிரத்து 093- ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 453- ஆக உள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று உயிரிழப்பு இல்லை. தொற்று பாதிப்பைக் கண்டறிய நேற்று பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 16,811- ஆகும்

இந்தியாவில்...

இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,221 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது சிகிச்சையில் 47,176 பேர் உள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 2.82% சதவிகிதமாக உள்ளது.ஒன்றிய சுகாதாரத் துறை நேற்று (13.9.2022) காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கரோனா பாதிப்புகள் தொடர்பாக தகவல் களை வெளியிட்டு உள்ளது. அதில், நேற்று (12.9.2022) ஒரே நாளில் மேலும்  5,221 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதன்மூலம்  இதுவரை பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 92 ஆயிரத்து 779 ஆக உயர்ந்தது. 

கரோனா தொற்று, பாதிப்பில் இருந்து நேற்று 5,970 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 19 ஆயி ரத்து 264 ஆக உயர்ந்தது. தற்போது 47,945 பேர் சிகிச்சை யில் உள்ளனர். இது 11.9.2022அய் விட 905 குறைவு.

கரோனா பாதிப்பால் மேலும் 11 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,150 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 2,15,26,13.039  பேர் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment