இதுதான் நீட் தேர்வு அரசுப் பள்ளி மாணவர்கள் 35 விழுக்காடு மட்டுமே தேர்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

இதுதான் நீட் தேர்வு அரசுப் பள்ளி மாணவர்கள் 35 விழுக்காடு மட்டுமே தேர்ச்சி

சென்னை, செப்.13- நீட்’ தேர்வில் 12 ஆயிரத்து 840 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதியதில், 4 ஆயிரத்து 447 பேர் வெற்றி பெற்று இருக்கின் றனர். இதன் தேர்ச்சி சத வீதம் 35 ஆகும். 

மருத்துவ படிப்பு களில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்த நிலையில், அதற்கான தேர்வு முடிவு கடந்த 7-ஆம் தேதி வெளி யானது. நாடு முழுவதும் தேர்வு எழுதியவர்களில், 56.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். தமிழ் நாட்டை பொறுத்தமட் டில், ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் எழு தியதில், 67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 51.3 ஆகும். இது கடந்த ஆண்டுகளை விட குறை வான தேர்ச்சி சதவீதம் என்று தெரிவிக்கப்பட் டது. தமிழ்நாட்டில் தேர்வு எழுதியவர்களில், அரசுப் பள்ளி மாணவர்கள் எத் தனை பேர் எழுதினார் கள்? என்ற விவரங்கள் வெளியிடப்படாம லேயே இருந்தன. இந்த நிலையில், நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாண வர்களின் புள்ளி விவரங் கள் நேற்று வெளி யாகின. 

அதன்படி, நீட் தேர்வை எழுத 17 ஆயி ரத்து 972 பேர் விண்ணப் பித்து இருந்தனர். ஆனால் இவர்களில் 12 ஆயிரத்து 840 பேர் தேர்வு எழுதிய தில், 4 ஆயிரத்து 447 பேர் வெற்றி பெற்று இருக்கின் றனர். இது 35 சதவீதம் தேர்ச்சி ஆகும். கடந்த சில ஆண்டுகளுடனான தேர்ச்சி சதவீதத்தை ஒப் பிடுகையில், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் சற்று அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர் களின் தேர்ச்சி சதவீதம் முறையே, 22.06 சதவீதம், 13.46 சதவீதம், 25.83 சதவீ தம், 24.27 சதவீதம் ஆகும். 

இந்த ஆண்டு தேர்ச் சியில், விழுப்புரம், விருது நகர், சேலம், நீலகிரி, பெரம்பலூர், மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்த மாவட்டங் களில் 100 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. சென்னை மாவட்டத்தில் 172 பேர் எழுதியதில் 104 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். மற்ற பெரும்பாலான மாவட் டங்களில், 20 முதல் 25 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். குறைந்த பட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

No comments:

Post a Comment