தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள் - வெகுசிறப்பாக கொண்டாடுவோம் ஒரத்தநாடு ஒன்றிய கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 11, 2022

தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள் - வெகுசிறப்பாக கொண்டாடுவோம் ஒரத்தநாடு ஒன்றிய கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

ஒரத்தநாடு, செப். 11- ஒரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 09.09.2022 வெள்ளி அன்று மாலை 6:30 மணி அளவில் உரத்தநாடு பெரியார் மாளிகையில் நடைபெற்றது. 

தஞ்சை மாவட்ட தலைவர் வழக்கு ரைஞர் சி.அமர்சிங் தலைமையேற்று உரையாற்றினார். திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் ச.சித்தார்த் தன், கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வம், மாநில பெரியார் வீர விளை யாட்டு கழக செயலாளர் நா.ராமகிருஷ் ணன், ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், ஒன்றிய அமைப்பாளர் பு.செந்தில் குமார், ஒன்றிய துணைச் செயலாளர் நா.பிரபு, ஒன்றிய ப.க. தலைவர் கு.நேரு, ஒன்றிய துணைத் தலைவர் இரா.துரை ராசு, வடக்கு பகுதி செயலாளர் பா.ராஜ கோபால், மாவட்ட பெரியார் கலை இலக்கிய அணி தலைவர் வெ.நாராயண சாமி, ஒன்றிய விவசாய அணி தலைவர் கக்கரக்கோட்டை மதியழகன், மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, உரத்தநாடு நகர தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், நகர செயலாளர் ரஞ்சித்குமார். மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.ராஜவேல், மண்டல மகளிர் அணி செயலாளர் அ.கலைச்செல்வி. கிழக்குப் பகுதி செயலாளர் துரை. தன்மானம், மேற்கு பகுதி செயலாளர் இரா.மோகன்தாஸ், ஒரத்தநாடு நகர துணை செயலாளர் க.மாரிமுத்து, உரத்தநாடு நகர இளைஞ ரணி அமைப்பாளர் மா சாக்ரடீஸ், நெடுவை விமல், ஒக்கநாடு மேலையூர் விஜய், சே.சாமிநாதன், வன்னிப்பட்டு செந்தில்குமார், ஒக்கநாடு மேலையூர் பொறியாளர் பா.பாலகிருஷ்ணன், இரா.மகேஸ்வரன், நா.வீரத்தமிழன், பெரியார் நகர் மா.மணி, மன்றாயன் குடிகாடு மதியழகன் ஆகியோர் பங் கேற்று கருத்துரை வழங்கினர். இக்கூட் டத்தில் கீழ்கண்டவாறு  நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்.

தீர்மானம் 1

ஒக்கநாடு மேலையூர் கழக தோழர் கோவி.வீரையன் தந்தையார் வை.கோவிந்த ராசு அவர்களின் மறைவிற்கு இக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித் துக் கொள்கிறது.

தீர்மானம் 2

உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் 33ஆவது முறையாக 850 விடுதலை சந்தாக்கள் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட் டது சந்தாக்களை அளித்த பெருமக்கள் அனைவருக்கும் நன்றியையும் வசூல் பணியில் ஈடுபட்ட கழகத் தோழர்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 3

உரத்தநாடு ஒன்றிய நகர திராவிடர் கழகத்தின் அழைப்பை ஏற்று ஒரத்தநாடு கடைவீதி வசூலில் கலந்து பெருமைப் படுத்திய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 4

தந்தை பெரியாரின் 144ஆஆவது பிறந்தநாள் விழாவை உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் மிகச் சிறப்பாக கொண்டாடுவது என வும் ஒன்றியம் முழுவதும் இரு குழுக் களாக இருசக்கர வாகனங்களில் சென்று கொடி ஏற்றிவிட்டு மாலையில் உரத்தநாட்டில் மாபெரும் பேரணி நடத்துவது எனவும் அனைத்து கிராமங்களிலும் கொள்கை விளக்க கூட்டங்களை நடத்துவது எனவும் முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 5

செப்டம்பர் 6 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை ஏற்று செயல் படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது. அத்தலைமைசெயற்குழு கூட்டத்தில் மாநில அளவில் விடுதலை சந்தா சேர்ப் பில் உரத்தநாடு ஒன்றியம் முதல் இடத் தில் இருக்கிறது என்று கூறி உரத்த நாட்டை பெருமைப்படுத்திய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக் கூட்டம் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.


No comments:

Post a Comment