புத்தாக்க தொழில் நுட்பத்தில் மின்சேமிப்பு மின்னணு சாதனங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

புத்தாக்க தொழில் நுட்பத்தில் மின்சேமிப்பு மின்னணு சாதனங்கள்

சென்னை, ஆக.6 மேம்படுத்தப்பட்ட மின் நுகர்வு, தொழில் நுட்ப முன்னேற்றத்துடன் வீட்டுக்கான யு.பி.எஸ்.களை 'லக்ஸ்' பிராண்டின் கீழ் அறிமுகப்படுத்தியுள்ள மைக் ரோடெக் நிறுவனம்,  சமீபத்திய புத்தாக்கமான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மின் சேமிப்பு சாதனம் சிறந்த செயல்திறன், அதிக நம்பகத் தன்மைக்காக அடையாளம் பெற்றுள்ளது.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைவர் சுபோத் குப்தா கூறியிருப்பதாவது: தீவிரமான போட்டி மிகுந்த மின் னுற்பத்தி சார்ந்த துறையில் ஈடுபட்டு வரும் மற்ற நிறுவனங் களிடமிருந்து மைக்ரோ டெக்-அய் வேறுபடுத்திக் காட்டுவது இன்வெர்ட்டர்கள் மற்றும் வீட்டு யு.பி.எஸ்.அய். வடிவமைப்பதில் எங்கள் நிறுவனம் செலுத்தி வரும் தீவிர கவனமே. எங்கள் தயாரிப்புகள் அதிக  தொழில் நுட்ப அம்சங்களைக் கொண்டிருந்தாலும்,  குறைந்த ஆற்ற லையே  பயன்படுத்துகின்றன. பவர்  பேக்கப் நேரம், பேட்டரி சார்ஜிங் நேரம், இயங்கும் நிலை ஏற்படுத்தும் சுமை உள்ளிட்ட பல அளவுருக்களை இதன்  ஸ்மார்ட் எல்.சி.டி. டிஸ்ப்ளே காட்டுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment