ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 15, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

கருநாடக பாஜக அரசின் சுதந்திர தின விழா விளம் பரங்களில் முன்னாள் பிரதமர் நேருவின் படம் தவிர்க்கப் பட்டதற்கு, காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கடும் கண் டனம். முதல்வர் பொம்மை ஒரு ஆர்.எஸ்.எஸ். அடிமை என விமர்சனம்.

தி டெலிகிராப்:

ஆகஸ்ட் 14அய் பிரிவினை பயங்கர நாளாக கொண்டாடும் பாஜகவின் செயலை, கண்டித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்த நாளை குறிப்பிடும் பிரதமர் மோடியின் உண்மையான நோக்கமானது, தற்போது நடந்து வரும் அரசியல் போரில், துயர் நிறைந்த வரலாற்று நிகழ்வுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதாகும். நவீன சாவர்க்கர்கள், ஜின்னாக் கள் தொடர்ந்து நாட்டை பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்,’என்று குற்றம்சாட்டி உள்ளார்.

தற்போது பாசிசம் முகமூடி அணிந்து வருகிறது. வெவ் வேறு கொள்கைகளை கூறும் கட்சிகளுக்கு இடையே ஒரு தேர்வு இருக்க வேண்டும் என்று நாட்டின் இறை யாண்மை கோருகிறது: சமூக விஞ்ஞானி பிரபாத் பட்நாயக்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடை வதைக் கொண்டாடும் வேளையில், “அகண்ட பாரதம்” (ஒருங்கிணைந்த இந்திய துணைக்கண்டம்) என்ற கொள்கையை நிறைவேற்றுவதற்கு பயம் மட்டுமே தடையாக இருக்கிறது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

.- குடந்தை கருணா


No comments:

Post a Comment