பொதுத்துறை நிறுவனங்கள்மீது தாக்குதலை நடத்துகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு திருச்சி சிவா சாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 16, 2022

பொதுத்துறை நிறுவனங்கள்மீது தாக்குதலை நடத்துகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு திருச்சி சிவா சாடல்

வேலூர், ஆக. 16- லாபத்தில் இயங்கி வரும் ஆயுள் காப்பீட்டு நிறுவனம்  உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதன்மூலம் பொதுத் துறை நிறுவனங்கள்மீது கடும் தாக்குதலை தொடுத்து வருகிறது என்று - ஒன்றிய பாஜக அரசை நாடாளு மன்ற மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா சாடினார்.

வேலூரில் கடந்த 13.8.2022 தொடங்கி 15.8.2022 வரை நடை பெற்ற தென்மண்டல இன்சூரன்ஸ் கூட்டமைப் பின் 35ஆவது மாநாட் டில் திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப் பினர் திருச்சி சிவா கலந்து கொண்டு உரையாற்றிய போது,

எல்.அய்.சி.-யை பாது காக்க நானும் வேலூர் தொகுதி மக்களவை உறுப் பினர் கதிர் ஆனந்தும் என் றும் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எப்போதும் உங்களுக்கு தோளோடு தோள் கொடுப்போம். உங்களு டன் இணைந்து நிற் போம். மாநிலங்களவை யிலும் மக்களவையிலும் கொண்டுவரப்படும் மசோதாக்களை நிலைக் குழுவுக்கு அனுப்பாமல் தனது அசுர பலத்தை வைத்துக் கொண்டு கார்ப் பரேட் பெரும் முதலாளி களுக்கு ஆதரவாகவும் ஏழை-எளிய மக்களை வஞ்சிக்கும் வகையிலும் ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது. நாடு முழுவதும் பொரு ளாதார மந்த நிலை ஏற் பட்ட நிலையிலும் பொது இன்சூரன்ஸ் நிறுவன மான  எல்.அய்.சி. தனது சிறப்பான பங்கை தொடர்ந்து அளித்து வருகிறது. ஆனா லும், 2014 இல் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் கடுமையான நெருக் கடிகளை கொடுத்து வருகிறது. ஊழியர்களின் குரல் வளையை நெரித்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள்மீது கடும் தாக்குதலை தொடுத்து வருகிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் உழைக்கும் மக்களின் நலன்களை பாதுகாத்திடவும் எல். அய்.சி. ஊழியர்களுக்கு ஆதரவாகவும் நம்பிக்கை அளிப்பதே எனது முக் கிய பணி என்றார்.

No comments:

Post a Comment