பாலியல் வன்முறை குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை அரசு ஊழியர் சங்க மாநில மகளிர் மாநாடு கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 16, 2022

பாலியல் வன்முறை குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை அரசு ஊழியர் சங்க மாநில மகளிர் மாநாடு கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஆக. 16- அரசுத்துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், உழைக்கும் பெண்கள் சிறுமிகள் மாணவிகள் மீது தொடுக்கப்படும் குடும்ப வன்முறைகள் உட்பட அனைத்து விதமான தாக்குதல்க ளையும் தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு ஊழியர் மகளிர் மாநாடு மாநாடு கோரிக்கை விடுத் துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மகளிர் மாநாடு கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை (ஆக.13) நடைபெற்றது. 

இம் மாநாட்டில் சமூகம், குடும் பம், அலுவலகம், கல்வி நிலையங் களில் பெண்கள், சிறுமிகள், மாணவிகள் மீது தொடுக்கப்படும் வன்முறைகள், பாலியல் துன்புறுத் தல்கள், அடக்குமுறைகளை தடுக்க வும் பாலின சமத்துவத்தை உருவாக் கவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் ஊழியர் களுக்கு அலுவலகங்களில் ஏற்படும் துன்புறுத்தல்களை விசாரிக்க ஒவ் வொரு மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திலும் ஒரு பெண் அதிகாரி யையும் அதற்கான உள்ளக குழுக் களையும் ஏற்படுத்தி நடைமுறைப் படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ஒன்றிய அரசில் வழங்கப்படுவது போன்று பெண் ஊழியர்களுக்கு குழந்தைகள் வளர்ப்பதற்கு 2 ஆண் டுகள் விடுப்பு வழங்க வேண்டும். கணவனை இழந்த பெண்கள் அரசு பணிக்கு வர வயது வரம்பு தளர்த்தப்பட வேண்டும்.

அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப் பான கழிப்பிட ஓய்வறை வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். மாற் றுத் திறனாளிகளாக உள்ள பெண் ஊழியர்களுக்கு அனைத்து அலு வலகங்களிலும் அதற்கேற்ற கழிவறை ஏற்படுத்த வேண்டும். 12 மாதம் மகப்பேறு விடுப்பு மகளிர் தினத்தை நினைவு கூறும் வகையில் மார்ச் 8 விடுமுறை நாளாக தமிழ் நாடு அரசு அறிவிக்க வேண்டும், சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு அங்கன் வாடி ஊழியர்களை நிரந்தர படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு 12 மாதங்கள் வழங்க வேண்டும், மாதவிடாய் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு  சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும், அரசு அலுவலகவளாகத்தில் குழந்தை கள் பாதுகாப்பு மய்யம் ஏற்படுத்த வேண்டும். அனைத்து அலுவலகங் களிலும் புகார் பெட்டிகள் வைக் கப்பட்டு கொடுக்கப்படும் புகார் கள் மீது உடனுக்குடன் நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும் உட்பட பல தீர்மானங்கள்  நிறை வேற்றப்பட்டன. பெண்கள் மற் றும் மகளிர் க்கான  விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதாகைகள், புகார் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட் டது. மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தையும் வரவேற்பு குழு நிர்வாகிகள் மாவட்ட தலைவர் சந்திரன் செயலாளர் நடராஜன் ஒருங்கிணைத்தனர்.

No comments:

Post a Comment