தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்காக ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 10, 2022

தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்காக ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஆக.10- கடந்த 29.7.2022 அன்று மாமல்லபுரத்தில் தொடங்கிய 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நேற்று (9.8.2022) மாலை நடைபெற்றது. நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விளையாட்டு வீரர்களை பெரிதும் பாராட்டினார். 

கடந்த 2 வார காலமாக 11 சுற்றுகளாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பன்னாட்டளவில் 186 நாடுகளை சேர்ந்த 1,736 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். 

ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்று சாதனை படைத்தது. அர்மேனியா வெள்ளிப்பதக்கத்தையும், இந்தியாவின் 2ஆவது அணி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றது.

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார். 

'திராவிட மாடல்' தமிழ்நாடு அரசு

போட்டி நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் கூறியுள்ளதாவது;

தமிழ்நாட்டை விளையாட்டில் ஒரு முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்கு திராவிட மாடல் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட் டில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒலிம்பிக் பதக்கங்கள் வெல்வோரை உருவாக்கும் பொருட்டு 'ஒலிம்பிக் தங்க வேட்டை' என்ற திட்டம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. உலக அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங் கள் வென்று நாட்டிற்கும், மாநிலத்திற்கும் பெருமை தேடித் தரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் கள் மற்றும் வீராங்கனை களை ஊக்குவிக்கும் வகை யில் அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்கப் பட்டு வருகிறது. தமிழ்நாட் டின் விளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன கருவி கள் மற்றும் பயிற்சி வசதிகளை அளிப்பதற்கான திட்டத்தைப் பெரிய அளவில் விரிவுபடுத்த உள்ளோம். இதன்படி, 50 விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகளில் அவர்களை மெருகேற்ற 60 கோடி ரூபாய் செலவு செய்யப்படும். இதே போல் கராத்தே, ஸ்குவாஷ், துப்பாக்கி சுடுதல், டோக்கியோ ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், வாள் சண்டை போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்களுக்கும் சிறப்பு நிதி உதவி செய்யப்பட்டுள்ளது. ஒருவரின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் விளையாட்டு மிக முக்கியப் பங்காற்று கிறது என்பதை தமிழ்நாடு அரசு நன்கு உணர்ந்துள்ளது. அதனால் தான் அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மினி விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளது. 

தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள்  - வீராங் கனைகளுக்கு, பன்னாட்டு பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நமது மண்ணின் விளையாட்டு களை உலக அரங்குக்குக் கொண்டு செல்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். சிலம்பாட்டத்துக்கு தேசிய அங்கீ காரத்தைப் பெற்றுத் தரவும் முயன்று வருகிறோம். தமிழ்நாடு அரசு எடுத்துவரும் முயற்சிகளின் காரணமாக சிலம்பாட்டத் தில் ஒளிரும் வீரர்களுக்கு மற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுவதைப் போல பரிசுத் தொகைகளும், 12 ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் கபடி, சிலம்பாட்டம் ஆகிய இரண்டு பாரம்பரிய விளையாட்டுகளுக்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது என்பதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதன் வழியாக புதிய திறமைசாலிகள் அடையாளம் காணப்பட்டு, பல இளைஞர்கள் விளையாட்டைத் தங்கள் பாதையாகத் தேர்ந்தெடுக்க உதவும். நவீன தேவைகளுக்கு ஏற்ப நம்மு டைய விளையாட்டு உள்கட்டமைப்பை புதுப்பிக்க உள் ளோம். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு வளர வேண்டும் என்று உழைத்து வருகிறோம். அதில் விளையாட்டுத் துறை யும் முக்கியமானது என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். 

-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்


No comments:

Post a Comment