எளிமையாகும் டிஜிலாக்கர்: புதிய அம்சங்கள் என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 19, 2022

எளிமையாகும் டிஜிலாக்கர்: புதிய அம்சங்கள் என்ன?

சென்னை, ஆக. 19 இ-_சேவையை மேம்படுத்துவதற்காக டிஜிலாக்க ருடன் கூடுதல் சான்றிதழ்களை இணைக்கவேண்டும் என்று  சென்னை பெரு நகர மாநகராட்சி கேட்டுக்கொள்கிறது.

இதில் வரி படிவங்கள், உரிமம் மற்றும் கட்டட திட்ட விண்ணப் பங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறது.

சென்னை பெருநகர மாநக -ராட்சி (ஜிசிசி) ஒரு மாதத்தில் இ-சேவைகளை மேம்படுத்துவதற்கான அடுத்த கட்ட பணிகளை தொடங்க வுள்ளனர், இதில் குடியிருப்பா ளர்கள் டிஜிலாக்கர் மூலம் அனைத்து சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை அணுகமுடியும் என்று கூறுகின்றனர்.  டிஜி லாக்கர் என்பது டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் கீழ் ஒன்றிய அர சாங்கத்தால் வழங்கப்படும் இணைய சேவை ஆகும். லீttஜீs://பீவீரீவீtணீறீறீஷீநீளீமீக்ஷீ.ரீஷீஸ்.வீஸீ/ என்ற இணையதளத் தில் இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.

தற்போது, ​​சென்னையில் வசிப் பவர்களுக்கான பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மட்டுமே டிஜிலாக்கருடன் இணைக்கப்பட் டுள்ளன. 

பின்பு, குடியிருப்பாளர்கள் சொத்து வரி மதிப்பீட்டு ஆவணம், சொத்து வரி பெயர் பரிமாற்றத்தின் நகல், தொழில்முறை வரி மதிப்பீடு, நிறுவன வரி மதிப்பீடு, வர்த்தக உரிமம் புதுப்பித்தல் நகல், கட்டடத் திட்ட ஒப்புதல் மற்றும் நிலத்தை பிரிப்பதற்கான திட்ட அனுமதி போன்ற பல்வேறு சான்றிதழ்களை டிஜிலாக்கர் மூலம் அணுகலாம்.

தற்போது, ​​கம்யூனிட்டி ஹால் இணையத்தில் இருப்பதை குடி யிருப்பாளர்கள் பார்க்கலாம் ஆனால் முன்பதிவு ஆப்லைனில் மட்டுமே உள்ளது. பெரும்பாலான மாநகராட்சி சேவைகள் ஏற்கனவே ஆன்லைனில் உள்ளன. இணைய தளத்தில் கூடுதல் தகவல்களுக்கு பொது அணுகலை வழங்க திட்ட மிடுகின்றனர். பொது தகவல் போர்ட்டலில், பாதுகாப்பு நடவ டிக்கைகளின் நேரம் மற்றும் பய ணங்களின் எண்ணிக்கை போன்ற பல்வேறு தகவல்களை வழங்கியுள் ளனர்.

பலர் தங்கள் பிரிவு எண்ணைப் பற்றிக் குழப்பமடைவதாக கூறியுள் ளனர். ‘உங்கள் பகுதியைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்ற பிரிவில், வரைபடத்தைச் சரிபார்த்து, ஒருவர் எந்த மண்டலம் மற்றும் பிரிவில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய உதவுகிறது. ஒரு பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறைகள், புதைகுழிகள், கம்யூனிட்டி ஹால் உள்ளிட்ட சென்னை பெருநகர மாநகராட்சி வசதிகளை மக்களால் பார்க்க முடியும். அருகில் இருக்கும் அம்மா உணவகங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்கள் ஆகியவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.

மக்களுக்கு சென்னை பெருநகர மாநகராட்சி தொடர்பான பொது தகவல்கள் வெளிப்படைத் தன்மை யுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் இணையதளத் தில் மக்களுக்கு கிடைக்கும்படி அமைத்துள்ளனர், மேலும் இதனை மேம்படுத்துவதற்கு செயல்படுகின் றனர். மேலும், மக் களின் சொத்து வரி அட்டை வழங்கினால் வங்கி களுடன் இணைத்துக் கொடுப் பார்கள். இவர்கள் அளிக்கும் கார்டில் சொத்து அடையாள அய்டி மற்றும் முகவரி போன்ற அடிப்படை விவரங்கள் இருக்கும். 

இத்தோடு கார்டில் கியூஆர் குறியீடு மற்றும் விர்ச்சுவல் பேமெண்ட் அய்டி பொருத்தப் பட்டிருக்கும், இதனை வைத்து ஸ்கேன் செய்வது சென்னை பெரு நகர மாநகராட்சி வலைப்பக்கத்தைத் திறந்தால், வரி செலுத்துவதற்கான ஒருவரின் தற்போதைய நிலுவைத் தொகையைக் காண்பிக்கும். இவ் வசதியை புதிதாக அறிமுகப்படுத்தி யுள்ளனர்.


No comments:

Post a Comment