போதைப்பொருள் ஒழிப்பு: புதிய திட்டம் - முதலமைச்சர் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

போதைப்பொருள் ஒழிப்பு: புதிய திட்டம் - முதலமைச்சர் உத்தரவு

சென்னை, ஆக. 11- தமிழ்நாட்டில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இது தொடர்பாக ஆலோசிக்க சென்னை கலைவாணர் அரங்கில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை சூப்பிரண்டுகள் பங்கேற்ற கூட்டம் நேற்று (10.8.2022) நடைபெற்றது. கூட் டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலை மைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, அரசு துறை செயலாளர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:- 

போதைப் பாதையை தடுக்க வேண்டும் - 

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதை மருந்தின் பயன்பாடும், அதற் காக அடிமையாகிறவர்களின் எண்ணிக் கையும் அதிகமாகி வருவதை நினைக் கும்போது கவலையும், வருத்தமும் கூடவே செய்கிறது. கடந்த ஆட்சியில் இதுபற்றி போதிய கவனம் செலுத்தாமல் விட்டது காரணமாக இந்த சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று சொன்னா லும், நாம் இதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம் என்பது மட்டுமே இப்போது எனக்கு இருக்கக்கூடிய ஒரே ஓர் ஆறுதல். அழிவுப்பாதையான போதைப் பாதையை, நமது முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுத்தாக வேண்டும்.

அதற்கான உறுதியை எடுத்தாக வேண்டும். போதை மருந்துகள் நம் மாநிலத்துக்குள் நுழைவதை, பரவு வதை, விற்பனையாவதை, பயன்படுத்து வதை தடுத்தாக வேண்டும். பயன்படுத் துபவர்களை அதில் இருந்து மீட்டு நல்வழிப்படுத்தியாக வேண்டும். புதி தாக ஒருவர் கூட இந்த போதை பழக் கத்துக்கு ஆளாகிவிடாமல் முனைப்பு டன் இளைஞர் சமுதாயத்தை பாது காக்க வேண்டும். இந்த உறுதியை ஆட் சியர்கள், காவல்துறை கண்காணிப்பா ளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களை நம்பி ஒவ்வொரு மாவட் டத்தையும் ஒப்படைத்துள்ளேன். நீங் கள்தான் அந்த உறுதியை எனக்கு வழங்க வேண்டும்.

ஒருவர் போதையை பயன்படுத்தி விழுந்து கிடப்பதால் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்கக் கூடாது. போதைப்பொருள்தான் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது.

சமூகத்தீமை

போதைப்பொருள் நடமாட்டத்தை தடுத்தல் என்பது கூட்டு நடவடிக்கை. போதைப்பொருள் பழக்கம் என்பது ஒரு சமூகத்தீமை. ஆகவே இந்த சமூகத் தீமையை அனைவரும் சேர்ந்துதான் தடுத்தாக வேண்டும். போதை மருந்தை பயன்படுத்துபவர் அதில் இருந்து விடுபட வேண்டும். விடுபட்டவர், போதை பயன்பாட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். 

பெற்றோர் தங்கள் பிள்ளைகளை போதைப்பொருள் பயன்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும். இதே கடமை பள்ளி ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. இதே பணி கல்லூரிகளின் நிர்வாகத் துக்கும் இருக்கிறது. போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு போதையில் விழுந்தவர்களை மீட்கும் பணியை சமூகநல அமைப்புகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் செய்தாக வேண்டும். 

போதையில் இருந்து மீள்பவர்க ளுக்கு மறுவாழ்வு வழங்கப்பட வேண் டும். இவ்வளவு காரியங்களை ஒரு சமூ கம் மொத்தமும் செய்தாக வேண்டும். அப்படி ஒருசேர அந்த சமூகம் இயங் கினால்தான், போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்க முடியும்.

முதலில், "எனது காவல் நிலைய எல்லையில் போதை மருந்து விற்ப னையை முற்றிலுமாக தடை செய்து விட்டேன்" என்று உங்கள் எல்லையில் உள்ள ஒவ்வொரு காவல்துறை ஆய் வாளரும் உறுதி எடுத்துக்கொண்டால் போதும், அதுவே முதல் வெற்றி. போதைப்பொருள் நடமாட்டத்தை தடுத்துவிட முடியும். 

எல்லைப்புற மாவட்டத்தில்

அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதற்கு முற் றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு மாநில எல்லைப்புற மாவட்ட அதி காரிகள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 

சாதாரண பயணிகள் மூலமாகவும், கூரியர் வழியாகவும் போதைப்பொருள் வருவதாக சொல்லப்படுகிறது. பயணி கள் பேருந்துகளை கண்காணிக்க வேண் டும். கூரியர் நிறுவனங்களுக்கு இது குறித்த எச்சரிக்கை கடிதத்தை அனுப்பி வைக்க வேண்டும். போதைப்பொருள் தயாரிப்பில் முக்கிய நபர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை சமூகத் துக்கு அம்பலப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் விற்பனை அதிகம் நடைபெறும் இடங்களை பட்டிய லிட்டு, அங்கு கண்காணிப்பை வலுப் படுத்த வேண்டும். கருப்பு பட்டியல் கிராமங்கள், பகுதிகள் என வகைப் படுத்தி கண்காணிக்க வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடு வோர் 'வாட்ஸ்-அப்', 'டெலிகிராம்' போன்ற சமூக வலைத்தளங்களில் தங்களுக்கென தனிக்குழுக்களை ஏற் படுத்திக்கொண்டு, அதில் பள்ளி மற் றும் மாணவர்களை இணைத்து விற் பனை செய்துவருவதாக தகவல்கள் இருக்கிறது. 

இதனை நுண்ணறிவு காவல்துறையினர் உன்னிப்பாக கண்காணிக்க வேண் டும். வியாபாரிகளும், கடைக்காரர்களும் போதைப்பொருளை விற்க மாட்டேன் என உறுதி எடுக்க வேண்டும். போதைப் பொருட்கள், பள்ளி மற்றும் கல்லூரி அருகே விற்பனையாகாமல் கண்கா ணிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமா னது, தனது எல்லைக்குள் இப்பொருட் களின் நடமாட்டத்தை தடுத்தாக வேண்டும். காவல் நிர்வாகமானது, போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழித்தாக வேண்டும். போதைப்பொருள் விற்கும் வியாபாரிகள் அனைவரையும் காவல்துறை கைது செய்தாக வேண்டும். அவர்களது மொத்த சொத்துகளும் முடக்கப்பட வேண்டும். போதைப் பொருள் தொடர்பான ரகசிய தகவல் களை பொதுமக்கள் மற்றும் மாணவர் கள் தெரிவிக்கக்கூடிய வகையில் தனி யாக ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்க வேண்டும்.

போதைப்பொருள் குற்றங்களை செய்தவர்களுக்கு பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாய்ப்பு என்.டி.பி.எஸ். சட்டத்திலே (பிரிவு 37) கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அரசு வழக்குரைஞர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, இ துபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் உடனே பிணையில் செல்வதை தடுத்து நிறுத்துங்கள். 

பள்ளிகள், கல்லூரிகள், சமூக கூடங் கள் உள்ளிட்ட இடங்களில் போதைப் பொருள் விற்பதற்கு எதிராக அதிகபட்ச தண்டனை வழங்க இந்த சட்டத்தின் 32பி (டி) பிரிவை முழுமையாக பயன்படுத்துங்கள். போதைப்பொருள் தடுப்பில் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுகிறது. ஆகவே, இந்த பிரிவுக்கு தனியாக ஒரு "சைபர் செல்" (சைபர் பிரிவு) உருவாக்கப்படும். 

-இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment