காஷ்மீரில் அந்நியப்பட்ட உணர்வை ஊட்டும் பா.ஜ.க. அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 19, 2022

காஷ்மீரில் அந்நியப்பட்ட உணர்வை ஊட்டும் பா.ஜ.க. அரசு

 ஜம்மு-காஷ்மீர் சி.பி.எம். தலைவர் தாரிகாமி

ஜம்மு, ஆக.19 ஜம்மு - காஷ்மீர், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நிலம். இந்த மாநில மக்கள் தாங்களாகவே முன்வந்து இந்த தேசத்திலே சேர்ந்து இந்திய மக்களாக மாறினோம். எங்க ளுக்கு எந்தவிதமான பாரபட் சமும் காட்டப்படாது என்று நம்பினோம். நாங்கள் எல்லாம் ஒற்றுமையாக, ஒருமித்த இந்தியர் களாக வாழ விரும்பினோம். ஆனால் பாஜக அரசு உருவான பிறகு காஷ்மீர் நிலைமை என்ன ஆனது? காஷ்மீர் மாநிலம் சிதைக் கப்பட்டிருக் கிறது. காஷ்மீர் மக்களின் உரிமைகளெல்லாம் பறிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த தேசத்தின் ஒரு பகுதி காஷ்மீர் என்ற உணர்வை ஊட்டுவதற்கு பதிலாக இந்த தேசத்தில் இருந்து அந்நியப்பட்ட உணர்வை ஊட்டுகின்ற வகையிலான செயல்பாடுகளில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. நாட்டின் அரசியல் சட்டத்தை மீறியிருக்கிறார்கள். அரசியல் சட்டத்தின் சரத்துகளை தவறாக பயன்படுத்துகிறார்கள். சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். ஜம்மு-காஷ்மீர் போன்ற செல்வச் செழிப்பான மாநிலத்தை கார்ப்பரேட் நிறு வனங்கள்  கொள்ளையடிக்கும் வேட்டைக்காடாக மாற்றும் திட்டத்தோடு இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்துகொண்டிருக் கின்றன.  

இந்த தேசம் விடுதலைப் போராட்டத்தின் போது மத மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு ஈடுபட்டு, ஒரு மதச்சார்பற்ற அரசு உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு மதச்சார் பற்ற இந்தியா அல்லாத நாடாக மாற்றப்பட்டு வருகிறது. சாதா ரண மக்கள் பாதிக்கப்படுகி றார்கள். சிறுபான்மை மக்கள் பாரபட்சமாக பார்க்கிற நிலை உருவாகியிருக்கிறது. இப்படிப் பட்ட அநீதிகள் நடந்து கொண்டி ருக்கும் போது, காஷ்மீர் மாநி லத்தில் நடைபெறும் அநீதிகளா னாலும் சரி, இந்தியா முழுவதும் நடைபெறுகிற அநீதிகளானா லும் சரி, இவைகளையெல் லாம் ஒழித்துக்கட்ட வேண்டும் என் றால், நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். நாம் ஒரே தேசம்; நாம் ஒரே மக்கள் என்ற அடிப்படையில்  ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் தான், விடுதலைப் போராட்டக் காலத்தில் எப்படி இந்த மக்கள்  ஒன்றிணைந் தார்களோ, அதே போன்ற ஒரு போராட்டத்தின் மூலம் தான் இந்த அக்கிரம ஆட்சிக்கு முடிவு கட்ட முடியும். அதன்  மூலம்தான் இந்த நாட்டின் மதச்சார்பின்மை யை பாதுகாக்க முடியும். இவ் வாறு ஜம்மு_-காஷ்மீர் சி.பி.எம். தலைவர் தாரிகாமி கூறியுள்ளார்.


No comments:

Post a Comment