ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

பீகார் அரசியலில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இடதுசாரி அமைப்புகளின் ஒருங்கிணைப்பு முதன்முறையாக நடைபெற்றுள்ளது. இந்திய அரசியலில் இதன் தாக்கம் இருக்குமா? என்கிறது தலையங்க செய்தி.

நிதிஷ்குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு சரத் பவார் பாராட்டு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

90களில் ஹிந்தி பேசும் மாநிலங்களில் எதிரொலித்த மண்டல், கமண்டல் அரசியல் மீண்டும் எதிரொலிக்க வாய்ப்பு என அரசியல் ஆர்வலர்கள் கருத்து.

தி டெலிகிராப்:

பல்கலைக்கழக அனுமதிக்கான பொது நுழைவுத் தேர்வு குளறுபடிகள் தேசிய தேர்வு முகமையின் தகுதி குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது என்கிறது தலையங்க செய்தி.

மக்களால் பேசப்படாத மொழியான சமஸ்கிருதத்தை ஹிந்துத்துவா சக்திகள் முதன்மைப்படுத்துவது வெறும் மொழியியல் திட்டம் அல்ல. அது சமூக பண்பாட்டுத் திட்டம் என்கிறார் இந்திய மொழியியல் ஆய்வு தலைவர் ஜி.என்.தேவ்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

தாழ்த்தப்பட்டோர் பிரிவில் உள் ஒதுக்கீடு அளிப்பது குறித்து அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

.- குடந்தை கருணா

No comments:

Post a Comment