பீமா கோரேகான் வழக்கு சமூக ஆர்வலர் வரவர ராவுக்கு பிணை உச்சநீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

பீமா கோரேகான் வழக்கு சமூக ஆர்வலர் வரவர ராவுக்கு பிணை உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஆக. 11- மராட்டிய மாநிலம் மும்பையை அடுத்த பீமாகோரேகா னில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற போரில் உயிர்நீத்தவர்க ளுக்கான நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் உரிமைக் காகத் தொண்டாற்றி வருபவர்கள் என   நாடு முழுவதுமிருந்து  ஆண்டு தோறும் ஜனவரி முதல் தேதியன்று ஒன்றுகூடி நினைவு கூர்ந்து வரு கின்றனர்.

அந்த வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியன்று பலரும் கூடிய நேரத்தில் அந்நிகழ்வை எதிர்த்து வருகின்ற ஆதிக்கவாதிக ளால் திட்டமிட்டு கலவர சூழல் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அந்த கலவரத் துக்கு காரணமாக இருந் ததாகக் கூறி, வரவர ராவ் உள்ளிட்ட சமூக ஆர்வ லர்கள், முற்போக்காளர் கள்மீது காவல்துறை வழக்கு தொடர்ந்தது. அவ்வழக்கில் சமூக ஆர் வலர் வரவர ராவ் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப் பட்டார்.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் மும்பை உயர் நீதி மன்றம் அவரை இடைக் கால பிணையில் விடுவித் தது. தனக்கு நிரந்தர பிணை வழங்க வேண்டும் என்று வரவர ராவ் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், மும்பைஉயர் நீதிமன்றம் அவரது கோரிக் கையை நிராகரித்தது.

இதை எதிர்த்து வரவர ராவ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். தற்போது வரவர ராவுக்கு 83 வயதாகிறது. அவரது உடல் நிலையைக் கருத் தில் கொண்டு உச்ச நீதி மன்ற நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான நீதிபதி கள் அமர்வு அவருக்கு பிணை வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment