பெரியார் ஆயிரம் வினா- விடை போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 10, 2022

பெரியார் ஆயிரம் வினா- விடை போட்டி

 


பழனி, ஆக. 10- பழனி கழக மாவட்ட மேனாள் தலைவர் பாலசுப்ர மணியன் உடல்நலக்குறைவால் 06-08-2022 அன்று அவரது இளைய மகள் யாழ்பிரபாவின் திருப்பூர் இல்லத்தில் மறைவுற்றார்

கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், திருப்பூர் மாவட்டத் தலைவர் யாழ்.ஆறுச்சாமி, ஆகியோர் 09-08-2022 அன்று அவரது இளைய மகள் திருப்பூர் இல்லத்திற்கு சென்று அவரது வாழ்விணையர் பத்மாவதி, மகள்கள் சித்ரா,யாழ்பிரபா, மருமகன்கள் ராஜேஸ்குமார், பாலமுருகன், சகோதரர் பழனி நகர திராவிடர் கழக செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பேரக்குழந் தைகளை சந்தித்து ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தனர்.



பெரியார் ஆயிரம் வினா- விடை போட்டிக்கான தகவல்கள் அடங்கிய விண்ணப்ப படிவங்களை பிருந்தாவன் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் லாரல் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் திரு பாலசுப்பிரமணியன் பட்டுக்கோட்டை நகர தலைவர் சிற்பி சேகர் மற்றும் பட்டுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரத்தின சபாபதி ஆகியோர் வழங்கினர்.

05.08.2022 அன்று கடலூர் மாவட்டம் சிறீமுஷ்ணம் வட்டாரப் பகுதிகளில் பெரியார் 1000 வினாடி வினாப் போட்டி  தேர்வு நடத்துவதற்கான படிவங்களை நடுநிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களை சிதம்பரம் கழக மாவட்ட கழக துணைதலைவர் மழவை கோவி.பெரியார்தாசன். மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் சிற்பி சிலம்பரசன் ஆகியோர் சந்தித்து படிவங்கள் வழங்கினர். ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி சாத்தாவட்டம், ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி காவாலக்குடி, ஊ.ஒ. நடுநிலைப்பள்ளி கூடலையாற்றூர், ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி சிறீஆதிவராகநல்லூர் ஆகிய பள்ளிகளில் போட்டி பற்றிய விவரங்கள் விளக்கப்பட்டது.



No comments:

Post a Comment