சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நீர்நிலைப் பகுதி ஆவணத்தைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 10, 2022

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நீர்நிலைப் பகுதி ஆவணத்தைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் ஆணை

தஞ்சாவூர், ஆக. 10- தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல் கலைக்கழகம் செயல் பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகம், அரசு புறம்போக்கு நீர்நிலைப் பகுதிகளில் கட்டடங் களை கட்டி ஆக்கிரமித் துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த 35 ஆண்டு களாக தங்களது அனுப வத்தில் உள்ள 31.37 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கே ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என் றும், அதற்கான இழப்பீட் டுத் தொகையை செலுத் தவோ அல்லது அதற்கு பதிலாக வேறு நிலம் வழங்கவோ தயாராக இருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட் டது.

அந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிராக ரித்தது. மேலும், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு நிலத்தை 4 வாரங் களுக்குள் காலி செய்து கொடுக்க வேண்டும் என வும் தஞ்சை வட்டாட் சியர் அறிக்கை பிறப்பித்து இருந்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா ஆகியோர் அடங் கிய அமர்வில் விசார ணைக்கு வந்தது.

அப்போது சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் ஜி.ராஜகோபாலன், பி. எச்.அரவிந்த் பாண்டியன் ஆகியோர் ஆஜராகி, ‘‘அரசு புறம்போக்கு நிலத்துக்கு பதிலாக வேறு நிலத்தை மாற்று நிலமாக எடுத்துக் கொள்ள தமிழ் நாடு அரசுகடந்த மே மாதம் அரசாணை பிறப் பித்துள்ளது. அதன்படி, மாற்று நிலம் வழங்க தயாராக இருக்கிறோம். அதற்கான விண்ணப்பம் பரிசீலிக்கப்படுமா என் பதை அரசு விளக்கினால் இந்த வழக்கை நடத்த ஏதுவாக இருக்கும்’’ என் றனர்.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கு ரைஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘அரசு புறம்போக்கு நிலத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அதன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க விடாமல் பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த 35 ஆண் டுகளாக தடுத்துவருகிறது.

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் சிறுசிறு ஆக் கிரமிப்புகளை அதிகாரி கள் அகற்றச் சென்றால், முதலில் சாஸ்த்ரா பல் கலைக்கழகம் ஆக்கிரமித்து வைத்துள்ள நிலத்தை மீட்டுவிட்டு எங்களிடம் வாருங்கள் என பொது மக்கள் தெரிவிக்கும் அள வுக்கு நிலைமை வந்துவிட் டது. நீர்நிலைப் புறம் போக்கு பகுதிகளை அந்த பல்கலைக்கழகம் ஆக்கிர மித்துள்ளதால் மாற்று இடத்தை பெற்றுக்கொள் ளும் அரசாணை சாஸ்த் ராவுக்கு பொருந்தாது’’ என ஆட்சேபம் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி கள், சாஸ்த்ரா பல்கலைக் கழகம் ஆக்கிரமித்துள்ள தாக கூறப்படும் பகுதி நீர்நிலைதான் என்பதை நிரூபிக்கும் வகையிலான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத் தரவிட்டனர்.

நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில்..

மேலும், அரசின் ஆக் கிரமிப்பு அகற்றும் நட வடிக்கையால் அங்குதங் கியுள்ள மற்றும் படிக்கும் மாணவர்களின் கல்விக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், இந்த வழக்கு முடியும் வரை சாஸ்த் ராபல்கலைக் கழகம் ஆக்கிரமித்துள்ள தாக கூறப்படும் நிலம், ஆவணமாக உயர் நீதி மன்றத்தின் கட்டுப்பாட் டில் இருக்கும் என உத் தரவிட்டு விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.


No comments:

Post a Comment