மின்னணு உற்பத்தி சேவைத் துறையின் முக்கிய தளமாக தமிழ்நாடு உருவாகிறது: ஆய்வாளர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 19, 2022

மின்னணு உற்பத்தி சேவைத் துறையின் முக்கிய தளமாக தமிழ்நாடு உருவாகிறது: ஆய்வாளர்கள்

சென்னை, ஆக.19- மின்னணு மற்றும் மின்னணு உற் பத்தி சேவை துறைக்கான வளர்ச்சியை முன்னெடுப் பதில் ஒன்றிய அரசு கவனம் செலுத்திவரும் நிலையில், மின்னணு உற் பத்தி சேவைகளுக்கான முக்கிய மய்யமாக தமிழ் நாடு உருவெடுத்துள்ளது,

சிறீபெரும்புதூர் மற்றும் தாம்பரம் பகுதி களில் நிறுவப்பட்டுள்ள இஎம்எஸ்  நிறுவனங்கள் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உயர்த்தியுள் ளது என்று ஆய்வாளர் கள் தெரிவிக்கின்றனர்.

சென்னையைச் சேர்ந்த மூன்று நிறுவனங் கள் பொதுப் பங்குகள் மூலம்  (அய்பிஓ) நிதி திரட்டமுயன்று வரு வதே இதற்கு சான்றாக விளங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் பாரத் எஃப் அய்எச் (ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப் நிறு வனம்) சுமார் ரூ.5,003.8 கோடி திரட்ட திட்டமிட் டுள்ளது; ; Avalon Technologies (ரூ.1,025 கோடி) மற்றும் தற்போது சந்தை யில் உள்ள Sryma SGS  டெக்னாலஜி ரூ.825 கோடி திரட்ட உள்ளது.

அடுத்த அய்ந்து ஆண்டு களில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை (PLI) திட்டத்திற்காக சுமார் 300 பில்லியன் டாலர் களை இந்திய அரசு ஒதுக் கியிருப்பதில் இருந்தே மின்னணு மற்றும் மின் னணு உற்பத்தி சேவைத் துறையின் வளர்ச்சி உண ரப்படுவதாக ப்ராஸ்ட் அண்ட் சல்லிவன் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment