செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 12, 2022

செய்தியும், சிந்தனையும்....!

சாமிக்குத் தண்டனை?

* புதுக்கோட்டை - தேர் கவிழ்ந்தது; கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்.

>> கோவில் கடவுள் சக்திபற்றி புலனாய்வு நடத்தப் படுமா?

அப்படி என்ன ரகசிய அரசியல்?

* ஆளுநரிடம் ரஜினிகாந்த் அரசியல் பேசியதில் தவறு இல்லை. 

>> அப்படியே - பேசிய அரசியல் என்ன என்பதைத் தெரிவித்திருக்கலாமே!

சுய விமர்சனமோ!

* அரசியல் சுயநலத்தால் தீர்வு காண முடியாது.

- பிரதமர் மோடி 

>> அத்வானியையும், வெங்கையா நாயுடுவையும் கேட்டுப் பாருங்கள் தெரியும்.

சங்கமம்!

* தேசியக் கொடியை முகப்புப் படமாக மாற்றிய ரஜினி. 

>> தேசிய அரசியலில் சங்கமமோ!

No comments:

Post a Comment