பிரதமரின் சொல்லும் - செயலும் ராகுல் காந்தி விமர்சனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 18, 2022

பிரதமரின் சொல்லும் - செயலும் ராகுல் காந்தி விமர்சனம்

புதுடில்லி, ஆக.18 குஜராத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில் அங்கு  நடைபெற்ற கோத்ரா  ரயில்  எரிப்பு கலவரத்தில் 700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் அய்ந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு கொடூரமாக கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதுடன் அவரது வயிற்றிலிருந்த   குழந்தையை எடுத்து எரித்துக் கொன்றனர் . மேலும் அவரது குடும்பத்தாரும் படுகொலை செய்யப்பட்டனர். 

சிறப்பு குழுவின் பரிந்துரையின்படி...

இவ்வழக்கில் குற்றவாளிகளான 11 பேருக் கும் 2008 இல் ஆயுள் தண்டனை அளிக்கப் பட்டு அவர்கள் சிறையில் இருந்து வந்தனர். இந்நிலையில் ஹோத்ரா வழக்கு தொடர்பாக குஜராத் அரசு சிறப்புக் குழு அமைத்தது. அந்த  சிறப்பு குழுவின் பரிந்துரையின்படி ஆகஸ்ட் 15 இல்  11 பேரும் விடுதலை செய் யப்பட்டனர். 

குற்றவாளிகளின் விடுதலைக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில் "அய்ந்து மாத கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள்  சுதந்திர தின விழாவின் போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

பிரதமர் மோடியின் சொல்லுக்கும், செய லுக்கும் உள்ள வித்தியாசத்தை நாடே பார்க் கிறது" எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment