40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 19, 2022

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!

தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா

தி.மு.க செய்தி தொடர்புத் துணைச் செயலாளர் தமிழ்.கா.அமுதரசன், தமிழர் தலைவர் அவர்களைச் சந்தித்து 3 ஆண்டு விடுதலை சந்தா ரூ.6000 வழங்கினார். தி.மு.க செய்தி தொடர்பாளர் வழக்குரைஞர் பொள்ளாச்சி சித்திக், தமிழர் தலைவரை சந்தித்து 2 ஆண்டு விடுதலை சந்தா ரூ.4000 வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கல்பாக்கம்  அணுமின் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் காந்தரூபன், வடிவேல், டென்சிங்சம்பத், பால்திமோத்தி, உதயகுமார், நீலமேகம், பழனிசாமி, சீனிவாசன், ரத்னகுமார், ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை ஓர் ஆண்டு சந்தாக்களை அளித்து உள்ளார்கள். நகர தலைவர் விஜயகுமார் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் செங்கை சுந்தரத்திடம் சந்தாவை வழங்கினர்.

தி.மு.க. வேதாரண்யம் மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் வே.முருகையன் விடுதலை ஆண்டு சந்தா 50க்கான தொகை ரூ.1,00,000அய் (ஒரு இலட்சம்)  திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இல.மேகநாதன், மண்டல தலைவர் கி.முருகையன், நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா ஆகியோரிடம் வழங்கினார். உடன் மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, வேதாரண்யம் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மண்டல மாணவர் கழகச் செயலாளர் இராச.மு.இளமாறன், மாவட்ட இளைஞரணி தலைவர் சு.இராஜ்மோகன்.  ஒரத்தநாடு நகர திராவிடர் கழகத் தலைவர் பேபி ரெ. இரவிச்சந்திரன் 10 விடுதலை சந்தாக்களை தஞ்சை மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர் அ உத்திராபதி, மாவட்ட விவசாய அணி தலைவர் பூவை இராமசாமி, ஒன்றிய விவசாய அணி தலைவர் கக்கரக்கோட்டை மதியழகன், மண்டல இளைஞரணி செயலாளர் நெல்லுப்பட்டு வே ராஜவேல், ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் பு.செந்தில்குமார், நகர திராவிடர் கழக செயலாளர் ரெ.ரஞ்சித்குமார்  ஆகியோர் முன்னிலையில் ஒரத்தநாடு விடுதலை சந்தா வசூல் குழு பொருளாளர் நெடுவை கு.நேரு, சந்தா வசூல் குழு செயலாளர் மாநல்  பரமசிவம் ஆகியோரிடம்  வழங்கினார்.  தி.மு.கழகத்தின் நாகப்பட்டினம் தெற்கு ஒன்றிய செயலாளர் வடவூர் க.இராஜேந்திரன் விடுதலை ஆண்டு சந்தா 50க்கான தொகை ரூ.1,00,000த்தை திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா ஆகியோரிடம் சந்தாக்களை வழங்கினார். உடன்: மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி  மண்டல மாணவர் கழக செயலாளர் இராச.மு.இளமாறன்.

தி.மு.கழகத்தின் வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்டர்காடு என்.சதாசிவத்தின் சார்பில் அவரது வாழ்விணையர் மேனாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ச.ஜோதிலட்சுமி விடுதலை ஆண்டு சந்தா 50க்கான ரூ.1,00,000அய் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மண்டல தலைவர் கி.முருகையன், நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா ஆகியோரிடம் வழங்கினார். உடன்: மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, மண்டல மாணவர் கழக செயலாளர் இராச.மு.இளமாறன் உள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன் ஆண்டு சந்தா ரூ.2000அய் மாவட்ட தலைவர் சுந்தரத்திடம் வழங்கினார். உடன் பெரியார்வாசன். கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரிலுள்ள கிருஷ்ணராஜ் மெடிக்கல் பவுண்டேசன் -  அருண் மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் ஜெயக்குமார் ஒரு ஆண்டிற்காண விடுதலை சந்தா ரூ.2000அய் பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் தருமன் வீரமணியிடம் வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம், கீழ்நல்லாத்தூர் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் வி.தேவதாஸ் ஓராண்டு விடுதலை சந்தாவினை திராவிடர் கழக மாவட்ட துணை செயலாளர் இரா.ஸ்டாலினிடம் வழங்கினார். விருதுநகர் மாவட்ட தி.மு.க தொண்டரணி துணை அமைப்பாளர் எஸ்.கருப்பழகு விடுதலை ஆண்டு சந்தா மாவட்ட தலைவர் இல.திருப்பதியிடம் வழங்கினார்.

தஞ்சை தெற்கு ஒன்றிய கழக சார்பில் விடுதலை சந்தா சேர்ப்பு பணியின்போது அ.இ.அ.தி.மு.க. பகுதி செயலாளர் வே.அறிவுடைநம்பி - ஆயுள் சந்தா, தஞ்சை ஆர்.பி.தமிழ்நேசன் - ஓராண்டு சந்தா, ஆசிரியர் அ.ரகமதுல்லா - ஓராண்டு சந்தா, கோஆப்டெக்ஸ் ரெ.சுரேஷ் - அரையாண்டு சந்தா, பால்.இராமச்சந்திரன் - அரையாண்டு சந்தா, கே.ரஷ்யா - அரையாண்டு சந்தாக்களை நெல்லுப்பட்டு இராமலிங்கத்திடம் வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்டம், அதிகத்தூர் கிராமத்தை சார்ந்த கி.மறுத்தோன்றியான் ஓராண்டு விடுதலை சந்தா, திருவள்ளூர் மாவட்டம், கல்யாணகுப்பம்  ஊராட்சி மன்ற தலைவர் சுனிதாவின் வாழ்விணையர் தளபதி சுந்தர் (இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர்) ஆகியோர் ஓராண்டு விடுதலை சந்தா, திருவள்ளூர் மாவட்டம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்மு.வ.சித்தார்த்தன் ஓராண்டு விடுதலை சந்தாக்களை திராவிடர் கழக  மாவட்ட துணை செயலாளர் இரா.ஸ்டாலினிடம் வழங்கினார்கள். கடம்பத்தூர் ஒன்றிய தலைவர்  டில்லி உடனிருந்தார். மண்டல மகளிர் அணி செயலாளர் மு. இந்திரா காந்தி 15 விடுதலை சந்தாக்களை மாவட்ட தலைவர் அறிவரசனிடம் வழங்கினார்.

வெம்பாக்கம் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜம்போடை  ஜெ.சி.கே.சீனிவாசன் விடுதலை ஓராண்டு 5 சந்தாவிற்கான தொகை ரூ.10,000 மற்றும் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கனிகிலுப்பை என்.சங்கர் விடுதலை ஓராண்டு சந்தாவிற்கான தொகை ரூ.2000த்தை செய்யாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வி.வெங்கட்ராமனிடம் அளித்தனர். சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சங்க தலைவர் ஜி.மோகன கிருட்டிணன் விடுதலை ஓராண்டு சந்தாவை வழக்குரைஞர் துரை.அருணிடம் வழங்கினார். 15.08.2022 அன்று நா.பார்த்திபன் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் 2 ஆண்டு சந்தா, 2 அரை ஆண்டு சந்தாக்கள் (ரூ.6000) வழங்கினார். கடகத்தூர் நற்சுவை நாட்டு சர்க்கரை உரிமையாளர் சுகுமார் ஓராண்டு விடுதலை சந்தா ரூ.2000அய் தருமபுரி மாவட்ட செயலாளர் பீம.தமிழ்பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர் கு.சரவணன், மண்டல ஆசிரியரணி அமைப்பாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை முன்னிலையில் வழங்கினார்.






No comments:

Post a Comment