பொறியியல் கலந்தாய்வு செப். 10 முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை: அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 28, 2022

பொறியியல் கலந்தாய்வு செப். 10 முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை: அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு

சென்னை, ஆக. 28- தமிழ்நாட்டில் பொறியியல் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத் தின்கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்பு களுக்கு 1 லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கியது.

முதல்கட்டமாக, மேனாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளை யாட்டு வீரர்கள் ஆகியோர் அடங் கிய சிறப்புப் பிரிவுக்கான கலந் தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில், 668 மாணவர்களுக்கு இடங் கள் ஒதுக்கப்பட்டன.

ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த பொதுப்பிரிவுக் கான கலந்தாய்வு, நீட் தேர்வுகள் முடிவுகள் தாமதம் காரணமாக தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட் டது. இந்நிலையில், நீட் தகுதித் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்தது.

இதையடுத்து, பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவுக் கலந்தாய்வு செப்டம்பர் 10ஆம் தேதி முதல் நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (28.8.2022) செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 10 முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை 4 கட்டங்களாக நடத்தப்படும்.

ஒவ்வொரு பிரிவிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும். முதல்கட்ட கலந்தாய்வு முடிந்த பின், காலி பணியிடங்களை நிரப்பு வதற்கான துணைக் கலந்தாய்வு நவம்பர் 15 முதல் 17-ம் தேதி வரை நடைபெறும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான வகுப்புக்கான கலந்தாய்வு நவ. 19, 20ஆம் தேதிகளில் நடைபெறும்.

`நான் முதல்வன்' திட்டத்தின் அடிப்படையில் பொறியியல் மாண வர்களுக்கான பாடத் திட்டம் மாற்றப்பட்டு, தமிழ் மொழிப் பாடமும் கட்டாயமாக்கப்பட்டுள் ளது.

ஆக. 30ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்கலை. துணைவேந்தர்கள் மற் றும் கல்லூரி முதல்வர்கள் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில், அரசுக் கல்லூரிகளில் இடங்களை அதிகரிப்பது, கலை, அறிவியல் படிப்புக்கான பாடத் திட்டம் மாற்றம் உள்ளிட்ட பல் வேறு அம்சங்கள் குறித்து ஆலோ சித்து, முடிவுகள் அறிவிக்கப்படும். மேலும், அனைத்துவித பல்கலைக் கழகங்களிலும் ஒரே பாடத் திட் டத்தைக் கொண்ட தமிழ், ஆங்கி லப் பாடங்களும் அமல்படுத்தப் படும். இவ்வாறு அமைச்சர் கூறி னார். உயர்கல்வித் துறைச் செயலர் தா.கார்த்திகேயன், அண்ணா பல் கலைக்கழக துணைவேந்தர் 

ஆர். வேல்ராஜ் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment