துண்டறிக்கை, பதாகைக்கும் தடை விதித்து மோடி அரசு அராஜகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 17, 2022

துண்டறிக்கை, பதாகைக்கும் தடை விதித்து மோடி அரசு அராஜகம்

புதுடில்லி, ஜூலை 17 - பிரதமர் நரேந்திர மோடி மற்றும்  பாஜக அரசை விமர்சிக்க எதிர்க்கட்சி கள் பயன்படுத்தி வந்த 40 வார்த்தை களுக்குத் தடை விதித்து மக்களவைச் செயலகம் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. 

பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம், மறியல் பட்டினிப் போரட்டம் போன்ற போராட் டங்களை நடத்துவதற்கு தடை விதிக்  கப்பட்டது.  தற்போது நாடாளுமன்றத் தின் இரண்டு அவைகளிலும் துண்டுப் பிர சுரங்களை வழங்குவது, பதாகை களைத் தூக்கிப் பிடிப்பது ஆகிய வற்றுக்கும் தடை விதித்து மோடி அரசு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.  

நாளை (18.7.2022) தொடங்கும் மழைக்காலக் கூட்டத் தொடர் ஆளும் பாஜக அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கருதப்பட்டது. மோடி அரசும் இந்த நெருக்கடியை உணர்ந்தது. எனவே, இந்த விவகா ரங்களை எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறோம் என்று  அச்சப்பட்ட மோடி அரசு, எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டை முடக்கும் வகையிலான உத்தரவுகளைப் பிறப்  பித்து வருகிறது. 

முதலாவதாக, மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ‘பயன் படுத்தக் கூடாத வார்த்தைகள்’ அடங்கிய புதிய கையேடு ஒன்றை  மக்களவைச் செயலகம் அவசர அவ சரமாக வெளியிட்டது. 

பிரதமர் நரேந்திர மோடி அரசைக் குறிப்பிட்டு, எதிர்க்  கட்சிகள் விமர்சிக்கும் இந்தி, ஆங்கில மொழிகளாலான வார்த்தைகளுக்கு எல்லாம் மோடி அரசு தடை விதித்தது. ஊழல், மோசடி, பொய், சர்வாதி காரம், நாடகம், இரட்டை வேடம், வாய்ஜாலம், வெட்கக்கேடு, துரோ கம், கண்ணீர், துதிபாடி, சர்வாதி காரி, இரட்டை வேடப் பேர்வழி, சிறு பிள்ளைத் தனமானவர், சகுனி, நாச சக்தி, ரத்தம் குடிப்பவர், நாடக காரர், பெருமை பீற்றுபவர், கிரி மினல், ரவுடித்தனம், லாலிபாப், பாப்  கட், ஒட்டுகேட்பு, வாய்ஜாலம் காட்டுபவர் (ஜூம்லாஜீவி), கரோனா பரப்புபவர், கண்துடைப்பு, கழுதை, முதலைக் கண்ணீர், முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், அராஜகம் போன்ற வார்த்தைகளைப் பயன் படுத்தினால், அந்த வார்த்தை கள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்  படும் என்று அறிவித்தது.

இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த  நிலையில், நாடாளுமன்ற வளாகத்  தில் ஆர்ப்பாட்டம், மறியல், பட்டினிப் போர் போன்ற போராட்டங்களை நடத்துவதற்கு தடை விதித்து அடுத்த தாக்குதலைத் தொடுத்தது. ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் நிலைப்பாட்டை வெளிப் படுத்துவதற்கான ஜனநாயக வழி முறையாக நாடாளுமன்ற வளாகத் திலுள்ள காந்தியார் சிலை  முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது காலம் காலமாக உள்ள நடைமுறை.  அதற்கு மோடி அரசு தடை விதித்தது. இதற்கு இடையிலேயே தற் போது, மக்களவைத் தலைவர் அனுமதியின்றி அவைக்குள் பதாகைகள், துண்டுப்  பிரசுரங்கள், பத்திரிகைக் குறிப்புகள் போன்றவற்றை கொண்டு வருவதற்கும் மோடி அரசு தடை விதித்துள்ளது. 

கடந்த கூட்டத் தொடரில் மாநிலங்க ளவையில் எதிர்க்கட்சியினர் கடும்  அமளியில் ஈடுபட்டனர். பதாகைகளை கிழித் தெறிந்து மறியலிலும் அவை  உறுப்பினர்கள் ஈடுபட்டனர். 

எனவே  இதனை கருத்தில் கொண்டே இந்த  புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment