தமிழ்நாட்டை முதல் மாநிலமாக ஆக்குவோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 18, 2022

தமிழ்நாட்டை முதல் மாநிலமாக ஆக்குவோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜூலை.18 நம்மைத் தாக்கி விளம்பரம் தேடுவோரை புறந்தள்ளி, மக்களுடன் பயணித்து முன்னேறு வோம்’ என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி வுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் நேற்று   (17.7.2022) எழுதிய கடி தத்தில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டதை அறிந்த ஆயிரக்கணக்கானவர்கள் என் னைத் தொடர்பு கொண்டும், கடிதம் எழுதியும் நலம்பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நலமடைந்து விட்டேன் என்ற நல்ல செய்தியுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலைமைச்சர் பொறுப்பை ஏற் கும் முன்னரே, மருத்துவ அறிவியல் மீது முழுமையான நம்பிக்கை வைத்து தடுப்பூசி போட்டுக் கொண்டதால், இந்த தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.மருத் துவர் மோகன் காமேஸ்வரன், மருத் துவர் அரவிந்தன், சட்டமன்ற உறுப் பினர் மருத்துவர் எழிலன், மருத்துவர் தீரஜ் என இந்த 4 மருத்துவர்களும் காவேரி மருத்துவமனையில் என்னை தினமும் நல்ல முறையில் கவனித்து, விரைந்து நலம் பெற உதவினார்கள். அவர்களுக்கும், மருத்துவக் குழுவினருக்கும் நன்றி.

இன்று மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குச் செல்கிறேன், இருந்தாலும் ஒரு வாரத்துக்கு வீட்டில் இருந்து ஓய் வெடுக்க கூறியுள்ளனர். முதலமைச்சர் என்ற முறையில் ஆற்ற வேண்டிய பணி களை வீட்டில் இருந்தாலும் கவனித்த படிதான் இருப்பேன். குடியரசுத் தலைவர் தேர்தலில் நேரில் சென்று வாக்களித்து திரும்ப வேண்டிய நிலையில் உள்ளேன்.

அதே நாளில் ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படுகிறது.பேரறிஞர் அண்ணா ‘தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு’ என்று மூன்று முறை சொல்ல, அனைத்து உறுப்பினர்களும் ‘வாழ்க.. வாழ்க.. வாழ்க’ என்று முழங்கி, ஒட்டு மொத்த தமிழ்நாடு மக்களின் உணர்வை உணர்த்திய நாள்.

கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு திருநாள் நிகழ்வு நடைபெறுகிறது. இதில், வீட்டிலிருந்தபடியே காணொலி யில் பங்கேற்று உரையாற்ற உள்ளேன். மேலும், 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடைபெறவிருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.

பிரதமர் மோடி வரும் 28ஆ-ம் தேதி, நேரு விளையாட்டரங்கில் இந்த நிகழ் வைத் தொடங்கி வைக்கிறார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற செஸ் சாம்பியன்களும், இளம் வீரர் களும் பங்கேற்கின்றனர்.

அதற்கான ஆயத்தமும் ஆர்வமும் இப்போது வெளிப்படத் தொடங்கியிருப்பதைக் காண முடிகிறது. முதல மைச்சர் பொறுப்பைப் போல், திமுக வின் தலைவர் பொறுப்பையும் சுமப்ப தால் கட்சிப் பணிகளையும் மருத்துவம னையில் இருந்த படியே கவனித்தேன்.

தமிழ்நாடு முதன்மை மாநில மாகவும், உலக நாடுகளுடன் ஒப்பிடக் கூடிய மாநிலமாகவும் உயர்த்த வேண்டும் என்பது என் பெருங்கனவு. அதனை அடைய வேண்டுமென்றால் இப்போது உழைப்பதை விடவும் இன் னும் அதிகமாக உழைக்க வேண்டும். நான் மட்டுமல்ல, நம்முடைய அரசில் பொறுப்பில் இருக்கும் அத்தனை பேரும் அயராது உழைக்க வேண்டும். உயர்ந்த லட்சியத்தை அடைய வேண்டு மென்றால் அதற்கான உழைப்பைக் கொடுத்தே ஆக வேண்டும். நம் பாதை யில் நாம் உறுதியாகப் பயணிப்போம். நம்மைத் தாக்கி, அதன்மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள நினைக் கும் வீணர்களுக்கு நாம் இடம் தரக் கூடாது.

அரசியல் பாதையில் குறுக்கிடும் அவர்களை இடக்கையால் புறந்தள்ளி நாம் முன்னேறிச் செல்வோம். வம்படி யாகப் பேசி விளம்பரம் தேடிக்கொள்ள நினைப்போரைத் தவிர்த்து, நம் வழியில் பயணிப்போம். மக்களுடன் நாம் எப் போதும் இருப்போம். மக்கள் நம்முடன் எப்போதும் இருப்பார்கள். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment