தாழ்த்தப்பட்ட மக்கள் பொது இடங்களில் செல்ல அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

தாழ்த்தப்பட்ட மக்கள் பொது இடங்களில் செல்ல அனுமதி

 பானகல் அரசர் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் முக்கியமான ஒன்று ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லா பொது இடங்களிலும் எல்லாத் தெருக்களிலும் செல்வதை எவரும் தடுக்கா வண்ணம் அரசாணை வெளியிட்டதாகும்.

உத்தரவு நெ. 2660, 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி.

1924ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:-

ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் பொதுச் சாலைகள், கிணறுகள் பற்றியது.

திரு. ஆர். சீனிவாசன் (இரட்டைமலை)

1 (9) இந்தச் சட்டமன்றம் கீழ்க்கண்டவைகளை நிறைவேற்றி அதை அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது

எந்தப் பொதுச் சாலையிலோ, தெருவிலோ, அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்கலாகாது என்பதையும். 

எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு போன்றவைகளாய் இருந்தாலும் அல்லது மக்கள் நடமாடும் இடமாய் இருந்தாலும் இவைகளிலெல்லாம் ஜாதி இந்துக்களுக்கும் என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்பதையும்

சென்னை அரசாங்கம் ஒப்புக்கொண்டு அதைத் தீர்மானமாக நிறைவேற்றி எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாகாக்களுக்கும் அனுப்பப்பட்டது. (இது அரசாங்க உத்தரவு - மாநில அரசு). 

- P.Lமூர் அரசாங்கச் செயலாளர்

மாநில அரசு 

No comments:

Post a Comment