நீதிக்கட்சி பற்றி அறிஞர் அண்ணா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

நீதிக்கட்சி பற்றி அறிஞர் அண்ணா

1957இல் தேர்தலில் போட்டியிட்டு 1967இல் - பத்தே ஆண்டுகளில் ஆட்சி யைப் பிடித்த பெருமை உங்கள் கட்சியின் (திமுகவின்) தனிப்பெரும் சாதனை அல்லவா? என்று அண்ணாவிடம் கேட்க, அறிஞர் அண்ணா மிகுந்த பெரு மிதத்துடனும் அதே நேரத்தில் தன்னடக் கத்துடனும் சொன்ன பதில் என்ன தெரியுமா?

“எங்களுடைய வெற்றி ஏதோ 10 ஆண்டுகளில் கிடைத்த வெற்றி அல்ல எங்கள் பாட்டன் - நீதிக்கட்சி இட்ட அஸ்திவாரத்தின் மீது ஏற்பட்ட வெற்றி. நீதிக்கட்சி அப்போது தோல்வி அடைந்த பின், காங்கிரஸ் கட்சியின் சத்தியமூர்த்தி அய்யர் ‘நீதிக்கட்சியை 500 அடி ஆழக் குழிதோண்டிப் புதைத்து விட்டோம்‘ என்று கூறியது உண்மை அல்ல -  இதோ நாங்கள் அதன் தொடர்ச்சியாகவே இந்த வெற்றிக் கனியைப் பறித்துள்ளோம்“ என்றார். நீதிக்கட்சிக்குத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அக்கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்சிய தந்தை பெரியார் அவர்கள் “அதென்ன அல்லாதார்? 100க்கு 3 பேர்களாக உள்ளவர்களை வைத்து எஞ்சிய 97 பேர்களை அல்லாதார் கள் என்று அடையாளப்படுத்திக் கொள் ளுதல் மிகவும் இழிவு - கேவலம் அல் லவா? நாம் 97 சதவிகிதத்தினர் திராவி டர்கள் என்று வரலாற்றுப் பெருமை தரும் பெயரையே வைத்துக் கொள்ளலாமே” என்று கூறிய பின்னர் திராவிடர் என்ற வரலாற்றுப் பெருமை தரும் அடை யாளமும், திராவிடரின் மீது ஆதிக்கம் செலுத்தியவர்கள் ஆரியர்கள் என்ற உணர்வும் பரவ ஆரம்பித்தது.

No comments:

Post a Comment