‘துக்ளக்குக்கு'ப் பதிலடி! "மூர்க்கனும் முதலையும் கொண்டது விடான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

‘துக்ளக்குக்கு'ப் பதிலடி! "மூர்க்கனும் முதலையும் கொண்டது விடான்!

மின்சாரம்

"(13.7.2022 ‘துக்ளக்‘ பார்ப்பன வார ஏட்டில் வெளிவந்த பதில்களுக்கான சாட்டையடி பதில்கள் இங்கு)

கேள்வி: அ.இ.அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.ஸின் நிலை?

பதில்: ஒற்றையாக நின்றாலும், ஒற்றைத் தலைமை முன் குனிவதில்லை என்பதே இரட்டைத் தலைமையில் குனிந்து குனிந்து குட்டு வாங்கிய ஓ.பி.எஸ்.ஸின் நிலை.

நமது பதில்: ஓ.பி.எஸ்.ஸுக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும். முதல் அமைச்சர் பதவி கிட்டவில்லை என்ற வுடன் குரு மூர்த்தி அய்யரிடம் தானே ஓடினார் ஓ.பி.எஸ். ‘நீயெல்லாம் ஒரு ஆம்பளையா? அம்மா சமாதிக்கு முன் போய் உட்காரு!‘ என்று சொன்ன குரு மூர்த்தி அய்யர் - தன் பாப்பாரப் புத்தியைக் காட்டி விட்டாரே!

பார்ப்போடு பழகேல் என்பது பழமொழி.

- - - - -

கேள்வி: 10ஆம் வகுப்பு தமிழ் பாடத் தேர்வில் 47,000 பேர் தோல்வி அடைந் திருப்பது பற்றி?

பதில்: அதனால் என்ன? பா.ஜ.க. ஆட்சி செய்யும் உ.பி.யில் ஹிந்தியிலும், மோடியின் குஜராத்தில் குஜராத்தியிலும், அதைவிட அதிகளவு மாணவர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள் என்று கூறி தி.க., தி.மு.க.,வி.சி.க., அன்பர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புக் கொடுக் கிறார்களே, பார்க்கவில்லையா?

நமது பதில்: எந்த இடத்தில் தி.க., தி.மு.க., வி.சி.க., அன்பர்கள் பட்டாசு வெடித்து இனிப்புக் கொடுத்தார்கள்? அறிவு நாணய மிருந்தால் துக்ளக் பதில் சொல்லட்டும்!

அட அண்டப்புளுகே உன் பெயர்தான் குருமூர்த்தியோ!

- - - - -

கேள்வி: அ.தி.மு.க. பிளவுபட்டால், நீங்கள் எந்த அணிக்கு ஆதரவு அளிப் பீர்கள், ஏன்?

பதில்: ‘தி.மு.க. பகையாளி அல்ல, எங்கள் பங்காளிதான்‘ என்று சொல்லாமல், எது தி.மு.க.வை எதிர்க்கிறது என்று முதலில் பார்ப்போம்.

நமது பதில்: புரிகிறதா? ஆக மொத்தம் தி.மு.க. தான் இந்தப் பார்ப்பனக் கும் பலுக்கு, மதவாத கூட்டத்துக்கு எதிரி! 

இதன் மூலம் என்ன தெரிகிறது? தி.மு.க. சரியான பாட்டையில் பீடு நடைபோடு கிறது என்பதற்கு வேறு சாட்சியம் தேவை யில்லை.

- - - - -

கேள்வி: தொலைக்காட்சி விவாதங் களை நீங்கள் பார்ப்பது உண்டா?

பதில்: காரில் போகும்போது பல குழாயடிச் சண்டைகளை பார்த்து விடுவதால், டி.வி. விவாதங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசையே வருவதில்லை, நேரமில்லாததும் ஒரு காரணம்.

நமது பதில்: நாராயண அய்யங்கார்களும், இராகவ அய்யர்களும் துண்டைக் காணோம், துணியைக் காணோம் (குறிப்பு: இராகவனை முக்கியமாக இந்த விசயத்தில் நினைவு கூர்க) என்று ஓட்டம் பிடித்த நிலையில் ‘சீச்சீ - இந்தப் பழம் புளிக்கும்‘ என்ற நரியின் கதைதான்.

எஞ்சியிருந்த இராம சுப்பிரமணிய அய்யரும் கட்சி மாறவே பி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ். கூடாரம் காலி என்ற விரக் தியின் விம்மல்!

- - - - -

கேள்வி: 1972இல் தி.மு.க. பிளவு - கருணாநிதி - எம்.ஜி.ஆர்.; 2022இல் அதிமுக பிளவு - பழனிசாமி - ஓ.பி.எஸ். - ஒப்பிடுங்கள்?

பதில்: 1972 பிளவு - இரண்டு புலிகளுக்கு இடையே, 2022 பிளவு - இரண்டு பூனை களுக்கிடையே.

நமது பதில்: ஆமாம் இந்த இரு பூனை களுக்கும் மசாஜ் செய்வது யாராம்?

- - - - -

கேள்வி: ‘கம்யூனிஸ்ட் கட்சி போல் கட்டுக்கோப்பானது சிவசேனா கட்சி’ என்ற கருத்து கலைந்து விட்டதே?

பதில்: கம்யூனிஸத்தை விடாமல் பிடித் துக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட்கள் கட்டுக்கோப்பாக இருக்கிறார்கள். ஹிந்துத் துவத்தை தத்தம் செய்த சிவசேனாவினர் கட்டுக்கோப்பை இழந்து விட்டார்கள்.

நமது பதில்: ஆக - ஹிந்துத்துவம் தான் இவர்களுக்கு உயிர்! 130 கோடி மக்கள் வாழும் ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள்தான் வாழ வேண்டும் என்று நினைக்கும் நீசர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

- - - - -

கேள்வி: உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்று முழங்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சியில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 47,055 மாணவர்கள் தோல்வியடைந்து இருக்கிறார்களே?

பதில்: ‘தமிழ் படித்தால் பிச்சை எடுக்க வேண்டியதுதான்’ என்று தமிழக அரசே போற்றும் ஈ.வெ.ரா. கூறியதை, அந்த 47,000 மாணவர்கள் நிச்சயம் படித்திருப் பார்கள். கஷ்டப்பட்டு தமிழ் படித்து பாஸ் செய்ய அவர்கள் என்ன பைத்தியமா?

நமது பதில்: தமிழில் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக்குக் கூட லாயக்காக மாட்டோம். (துக்ளக், 23.6.20210) என்று எழுதியதே துக்ளக். எப்படி தலைகீழாகப் புரட்டுகிறது பார்த்தேளா?

இந்தப் பித்தலாட்டத்துக்குப் பெயர் போனவர்கள்தான் பார்ப்பனர்கள்.

- - - - -

கேள்வி: பி.சி.ஆர். சட்டம் எல்லா ஜாதியினருக்குமே பாதுகாப்பானதா அல்லது பட்டியல் இனத்தவருக்கு மட்டுமே பாதுகாப்பாக இயற்றப்பட்டதா?

பதில்: பட்டியலினத்துக்குப் பாதுகாப் பாக இருக்க நிறைவேற்றப்பட்ட அந்த சட்டம், மற்றவர்களுக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது. அதை வைத்து ப்ளாக்  மெயில் கூடச் செய்கிறார்கள் என்று உச்சநீதி மன்றமே கூறியிருக்கிறது. (தி ஹிந்து, 20.3.2018).

நமது பதில்: முதலில் பார்ப்பான் பூணூல் போடுவதே தங்களைத்  துவி ஜாதி (இரு பிறப்பாளன்) மற்றவர்களை கீழ் ஜாதி - சூத்திரன் என்று சொல்லுவதற் குத்தான். இந்தப் பி.சி.ஆர். சட்டம் இவர்கள் மீதுதான் பாயவேண்டும்.

- - - - -

கேள்வி: நம் நாட்டில் பெரும்பாலான கடவுள் பக்தர்கள் தர்மத்தை அனுசரிப்ப தில்லையே? உங்கள் பார்வையில் அவர் களும் நாஸ்திகர்களா?

பதில்: நமது சாஸ்திரங்களின்படி தர் மத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மட் டுமே ஆஸ்திகர்கள். கடவுள் பக்தி ஆஸ்தி கத்தின் அடையாளம் அல்ல. தர்மம்தான் அதன் அடையாளம். இப்போது தி.மு.க. வினரும் கோவிலுக்குச் சென்று தங்களை ஆஸ்திகர்கள் என்று கூறிக் கொள் கிறார்கள். தர்மத்தில் நம்பிக்கை இல்லாத கடவுள் பக்தர்கள் நாஸ்திகர்களே.

நமது பதில்: பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது பார்த்தேளா? கடவுள் மறுப்பு நாஸ்திகம் அல்லவாம் - வேத மறுப்புதான் நாஸ்திகம் - இதனை காஞ்சி சங்கராச்சாரியாரே கூறியுள்ளாரே!

(ஆதாரம்: மறைந்த காஞ்சிபுரம் சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதியின் “தெய்வத்தின் குரல்” பாகம் 2 - பக்கம் 407-408)

மனுதர்ம சாஸ்திரமும் இதையேதான் கூறுகிறது.

“வேதங்களும் ஸ்மிருதிகளும் தர்மத் தின் இருப்பிடங்கள். ஆதலால், இவை களை அறிவுபூர்வமாக ஆராய்ந்து எவ ராவது கண்டித்தால் அவர்கள் வேதத்தின் எதிரிகள், வேதத்தின் எதிரிகள்தான் நாஸ்திகர்கள். அவர்களை ஊரை விட்டு துரத்திவிட வேண்டும்“ என்கிறது மனு சாஸ்திரம் (அத்தியாயம் 2, சுலோகம் 11).

அவர்கள் தருமம் என்று கூறுவது வருணாசிரம தர்மம் - அதுதானே பிர்மா வின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன்; காலில் இருந்து பிறந்தவன் சூத்திரன்; சூத்திரன் என்றால் வேசி மகன் என்று கூறுகிறது.

தேவாதீனம் ஜகத்சர்வம்

மந்த்ரா தீனம் தவதேவதா 

தன் மந்த்ரம் பிரம்மா தீனம் 

பிராமணா மம தேவதா (ரிக் வேதம் 62ஆவது பிரிவு 10ஆம் சுலோகம்).

இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப் பட்டது; கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப் பட்டவர். மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை. எனவே பிராமணனே கடவுள். பிராமணனையே தொழ வேண் டும்“ என்பது இதன் பொருள். ‘அருந் தொண்டாற்றிய அந்தணர்’ நூல் வெளி யீட்டு விழாவில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதியும் கடவுளுக்கு மேலே பிராமணன் என்று சொல்லவில்லையா?

‘திருடனும், புத்தனும் ஒன்றாவான்’ என்று வால்மீகி இராமாயணம் கூறுவதும் இந்தப் பொருளில்தான். புத்தர் வேதங் களை, யாகங்களை, வருண தர்மத்தை எதிர்த்தார் அல்லவா. அதனால்தான் இப்படி.

இப்பொழுது புரிகிறதா? கடவுள் என்பது பிராமணனே! இதைச் சொல்லு வது  வேதங்கள் ஆகையால், வேதத்தை எதிர்ப்பவன் நாஸ்திகன் ஆகிறான். இதனை இந்த 2022லும் எழுதும் ஜாதித் திமிரும், பூணூல் கொழுப்பும் மண்டை யில் வழிவதை தெரிந்து கொள்ளுங்கள்.

- - - - -

கேள்வி: ஈ.வெ.ரா.வின் பிராமண எதிர்ப்பில் (அழிப்பு), ராஜாஜி என்ன வகையான விதிவிலக்கில் வருவார்?

பதில்: பிராமணரை ஒட்டுமொத்தமாக எதிர்த்த ஈ.வெ.ரா., தனது சொந்த வாழ்க்கையில் எழுந்த ஒரு வாழ்வா - சாவா பிரச்சினையில் பிராமணர் ஒரு வரை - ராஜாஜியை - நாடி ஆலோசனை கேட்டது விதிவிலக்காக இருக்க முடியாது. பிராமணரை ஆலோசனை கேட்பது அவரது வழக்கமாக இருந்திருக்க வேண் டும்.   இல்லையென்றால் தன் எதிரிகளான பிராமணர்களில் ஒருவரை, தலைபோகும் சொந்த விஷயத்தில் அவர் எப்படி ஆலோசனை கேட்டிருப்பார்? தமிழக அரசியலையே மாற்றிய அந்தப் பிரச்சி னையில் தான் தி.மு.க. பிறந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.

நமது பதில்: ‘மூர்க்கனும், முதலையும் கொண்டது விடான்‘ என்பார்கள் - அந்தப் பட்டியலில் பார்ப்பனர்களையும் சேர்த் துக் கொள்ள வேண்டும்.

ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டார் பெரியார் - ஆனால் ராஜாஜியின் ஆலோ சனைகளுக்கு எதிராக செயல்பட்டார் பெரியார் (பெரியார் - மணியம்மையார் திருமண ஏற்பாடு).

இதில் ராஜாஜியின் ஆலோசனைக்கு மரியாதை எங்கே இருக்கிறது? ஏற் கெனவே பதிலடி கொடுத்தும் புத்தி வர வில்லையே!

No comments:

Post a Comment