கரோனா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தரும் தகவல்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 8, 2022

கரோனா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தரும் தகவல்கள்

கோவை, ஜூலை 8   தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர் களில் 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியமில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கோவை மதுக்கரையை அடுத்த குரும்பபாளையத்தில் சி.எஸ்.ஆர் நிதி பங்களிப்புடன் ரூ.27 லட்சம் செலவில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டடத்தை நேற்று (7.7.2022) திறந்து வைத்த அவர், அங் குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வருமுன்காப்போம் திட்ட முகாமை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டு, சுகாதாரத்துறை அலுவலர் களால் கண்காணிக்கப்பட்டு வரு கின்றனர்.

அவர்களுக்கும் பெரிதாக பாதிப்பு எதுவும் இல்லை. தற்போது பரவும் தொற்றானது குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால், அனைவருக்கும் பரவுகிறது.

ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை யில் 10 சதவீதத்துக்கும் மேற்பட் டோருக்கு தொற்று உறுதிசெய்யப் பட்டாலோ, தொற்றால் பாதிக்கப் படுபவர்களில் 40சதவீதத்துக்கும் மேல் மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டால் மட்டுமே கட்டுப் பாடுகள் விதிக்கப்படும்.

ஆனால் தற்போது 5 சதவீதம்பேர் மட்டுமே தனியார், அரசு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். எனவே, புதிய கட்டுப் பாடுகள் விதிக்கவேண்டிய அவசிய மில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியிலிருந்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் 50 மாணவர்கள் சேர்க் கப்பட்டுள்ளனர்.

கட்டடங்கள் கட்டுவதற்கு வரைபடம் இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தம் விடப்பட உள்ளது. கட்டு மான பணிகள் தொடங்க 6 மாதங் கள் ஆகும். 

கோவை மாவட்டத் துக்கும் ஒரு எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி வேண்டும் என்றகோரிக் கையை ஒன்றிய அரசிடம் வலி யுறுத்தி வருகிறோம். அரசு மருத்துவ மனைகளில் பச்சிளங் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் எங்கெல்லாம் கேமராக்கள் இல்லையோ அங்கெல் லாம் பொருத்த நடவடிக்கை எடுக் கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment