நோயாளிகளின் நோய் விபரங்களை வெளியிடத் தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 24, 2022

நோயாளிகளின் நோய் விபரங்களை வெளியிடத் தடை

சென்னை, ஜூலை 24  ''தங்களிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகள் குறித்து, பொதுவெளியில் வெளியிடும் மருத்துவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் செந்தில் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் அளித்த பேட்டி: சமீப காலமாக நோயாளிகள் சிறப்பு சிகிச்சை குறித்து, பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளி வருகிறது. அவற்றில், மருத்துவர்கள் பத்திரிகைகள் முன் நோயாளிகளை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு செய்யப்பட்ட சிகிச்சை முறைகளை விளக்கிக் கூறுகின்றனர்.இவ்வாறு செய்வது மருத்துவ வரை முறைகளை மீறிய செயல். அவ்வாறு செய்வோர், நோயாளிகளின் ரகசியங் களை காக்க தவறியவர் ஆவார்.

இதுபோல, சுய விளம்பரம் செய்யும் செயல்களை மருத்துவர்கள் கைவிட வேண்டும். பொதுமக்கள் நலனுக்காக வெளியிடப்படும் ஊடக சந்திப்பில், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நோயாளி பெயர், அவர்களுடைய ஒளிப்படம், காட்சிப்பதிவு வெளியிடக் கூடாது. சிறப்பு சிகிச்சை, வசதிகள் குறித்த விபரங்களை மருத்துவமனை பெயரில் பொதுவாக வெளியிடலாம். மருத்துவர்கள் அல்லாத மருத்துவ நிர்வாகிகள் பங்கேற்கலாம்.

மேலும், ஒரு மருத்துவர், மருத் துவமனை துவக்குதல், மருத்துவமனை இடத்தை மாற்றுதல், விடுமுறைக்கு பின் மீண்டும் செயல்படுதல் போன்றவற்றுக்கு விளம்பரம் செய்யலாம்.  அவற்றில், மருத்துவர்கள், ஒளிப்படம் வெளியிடக் கூடாது. மருத்துவ வரைமுறை மீறி செயல்படும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

No comments:

Post a Comment