முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத கட்சியாக மாறியது பாரதிய ஜனதா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 10, 2022

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத கட்சியாக மாறியது பாரதிய ஜனதா!

புதுடில்லி, ஜூலை 10 நாடா ளுமன்றத்தில் பாஜக சார்பில் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒன்றிய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பதவி விலகியுள்ளதைத் தொடர்ந்து,  பாரதிய ஜனதா கட்சி முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப் பினர்கள்  இல்லாத கட்சியாக மாறி உள்ளது. நாடாளுமன்றத் தில் மொத்தம் 395 நாடாளுமன்ற உறுப் பினர்களை வைத்துள்ள பாரதிய ஜனதா கட்சி, சிறு பான்மையினமான முஸ்லிம் சமுதாயத்தினருக்கு மதிப்பளிக் கும் வகையில், அச்சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக்கூட உறுப் பினராக வைத்திருக்கவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.

ஒன்றியசிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியின் பதவிக் காலம்   முடிவடையும் நிலையில், அவர் பதவி விலகினார். இதன் காரணமாக, நாடாளுமன்றத் தில் பாஜக கட்சி சார்பில் எந்த வொரு இஸ்லாமிய நாடாளு மன்ற உறுப்பினர்ளும் இடம் பெறவில்லை. முக்தர் அப்பாஸ் நக்வி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி சார்பில் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு உள்ளதாக டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக் கின்றன.

முஸ்லிம்கள் அதிகம் விரும் பாத கட்சியாகக் கருதப்படும் பாஜகவில் 2019 மக்களவைத் தேர்தலில் அம் மதத்தினர் ஏழு பேர் போட்டியிட் டனர். ஆனால், ஒருவரால் கூட இதில் வெற்றி பெற முடியவில்லை. பாஜக வரலாற்றில் இதுவரை நாடாளுமன்ற  உறுப்பினர் களாக 7 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். 

முக்தார் அப்பாஸ் நக்வீ, எம்.ஜே.அக்பர், நஜ்மா ஹெப் துல்லா, ஷானாவாஸ் உசைன், சிக்கந்தர் பக்த் மற்றும் ஆரிப் உசைன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக  இருந் தனர்.  அதைத்தொடர்ந்து,  ஜபர் நாடா ளுமன்ற உறுப்பினராக இருந் தார். அவர்களின் பதவிக்காலம் முடி வடைந்த நிலையில், மீண்டும் முஸ்லிம்களுக்கு பாஜக வாய்ப்பு வழங்கவில்லை.

2014 மற்றும் 2019 பொதுத் தேர் தல்களில் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி, அதன் கூட்டணிக் கட்சிகளுடன் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடிந்தாலும், அக்கட் சியின் முஸ்லீம் வேட்பாளர்கள் எவரும் இரு ஆண்டுகளிலும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப் படவில்லை.

2014 இல், பாஜக மொத்தம் 482 பேரில் ஏழு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது. இருப்பினும், அப்போது  இருந்த ஷாநவாஸ் உசேன் உட்பட அனைவரும் தோல்வியடைந் தனர். 

2014 தேர்தலில், ‘மோடி அலை’ என்று கருதப்பட்டதன் கீழ் பாஜக முதன் முதலில் ஆட்சிக்கு வந்தபோது, ​​ஒட்டு மொத்தமாக அக்கட்சி 31% வாக்கு களைப் பெற முடிந்தது. இருப்பினும், முஸ்லீம் வேட் பாளர்கள் தங்கள் முஸ்லிம் அல் லாத சகாக்களைவிட கணிச மாக மோசமான நிலையில் உள்ளனர். முஸ்லிம் வேட் பாளர்கள் சராசரியாக தலா 80,000 வாக்குகளைப் பெற்றா லும், பாஜகவின் முஸ்லீம் அல் லாத வேட் பாளர்கள் தலா 3.5 லட்சம் வாக்குகளைப் பெற் றுள்ளனர்.

2019 ஆம் ஆண்டில்,  ஆறு முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தியது _- ஜம்மு மற்றும் காஷ்மீரில் மூன்று, மேற்கு வங் கத்தில் இரண்டு மற்றும் லட்சத் தீவில் ஒன்று - ஆனால் மீண்டும், அவர்களில் எவரும் ஒரு இடத்தைக்கூட   வெல்ல முடிய வில்லை.

அது போல எந்த மாநி  லத்திலும், யூனியன் பிரதேசத் திலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எவரும் இல்லை. பொதுத் தேர்தல்கள் மட்டுமே முஸ்லிம்கள் பாஜகவில் இருந்து விலகிச் செல்லும் தேர்தல் அல்ல. 28 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிர தேசங்களின் சட்டமன்றங் களில் தற்போது ஒரு  முஸ்லிம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை.

இந்த ஆண்டின் தொடக் கத்தில் அய்ந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு மந்திர்-மஸ்ஜித் அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அடுத்த பொதுத் தேர்தலுக்கு பாஜக தயாராகி வரும் நிலையில், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள், முஸ்லிம் களை நெருங்கி வரக்கூடிய நல்லுற வுக்கான எந்த அறி குறியும் தெரியவில்லை.


No comments:

Post a Comment