பெட்ரோல் விலை உயர்வுக்கு ஷாஜகானும் வேலையின்மைக்கு அக்பரும்தான் காரணமோ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 8, 2022

பெட்ரோல் விலை உயர்வுக்கு ஷாஜகானும் வேலையின்மைக்கு அக்பரும்தான் காரணமோ!

அசாதுதீன் ஒவைசி கிண்டல்

புதுடில்லி, ஜூலை.8 - பெட்ரோல் - டீசல் விலை உயர்வு உள்ளிட்ட எந்த பிரச்சினையானாலும் அதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் மீது பழிபோடுவதையே ஒன்றிய பாஜக அரசு வழக்கமாக வைத்திருக்கிறது. அந்த வகையில், பாஜக அரசின் இந்த பழிபோடலை, மஜ்லிஸ் கட் சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி டில்லி யில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கடுமையாக கிண் டலடித்துள்ளார்.  அந்தக் கூட்டத் தில் பேசியிருக்கும் ஒவைசி, “நாட் டின் அனைத்து பிரச்சினைகளுக் கும் முகலாயர்கள் மற்றும் முஸ்லிம்களை ஒன்றிய அரசு குற்றம் சாட்டுகிறது. நாட்டில் இளை ஞர்கள் வேலையின்றி உள்ளனர். பணவீக்கம் அதிகரித்து வருகிறது. டீசல் லிட்ட ருக்கு 102 ரூபாய்க்கு விற்கப்படு கிறது. உண்மையில் இதற்கெல்லாம் பொறுப்பு அவுரங்க சீப்-தான். பிரதமர் நரேந்திர மோடி அல்ல.

நாட்டில் நிலவும் வேலையில் லாத் திண்டாட்டத்திற்குப் பேரரசர் அக்பர்தான் பொறுப்பு. பெட்ரோல் லிட்டருக்கு 115 ரூபாய்க்கு விற்கப் படுகிறது. இந்த பெட்ரோல் விலை உயர்வுக்கு ஷாஜகானே பொறுப்பு. அவர் தாஜ்மஹாலைக் கட்டவில்லை என்றால், இன்று பெட்ரோல் 40 ரூபாய்க்கு விற்கப்படும்.  தாஜ்மஹாலையும், செங்கோ ட்டையையும் கட்டி ஷாஜகான் தவறி ழைத்து விட்டார். அந்தப் பணத்தை அவர் சேமித்து வைத்திருந்து, 2014-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி யிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்” என்று கேலி செய்துள்ளார்.  

முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு செல்லுமாறு பாஜக-வினர் கூறி வரு வதற்கும் ஒவைசி பதிலடி கொடுத்துள் ளார். “இந்திய முஸ்லிம்களுக்கும், பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜின்னாவின் முன்மொழி வை நாங்கள் நிராகரித்தோம். இந்த ஆண்டு சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டைக் கொண்டாடுவோம். ஜின்னாவின் முன்மொழிவை நிரா கரித்து இந்தியாவில் தங்கியதற்கு சாட்சியாக இன்று நாட்டில் 20 கோடி முஸ்லிம்கள் இருக்கிறோம். இந்தியா எங்கள் அன்புக்குரிய நாடு. நாங்கள் இந்தி யாவை விட்டு வெளியேறமாட்டோம். நீங்கள் எவ்வளவு முழக்கங்களை எழுப் பினாலும், எங்களை வெளியேறச் சொன்னாலும் நாங்கள் இங்கே தான் வாழ்வோம், இங்கேயே சாவோம்” என்று ஒவைசி குறிப் பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment