பானகல் அரசர் - சமூகநீதிக்கான வரலாற்று நாயகர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

பானகல் அரசர் - சமூகநீதிக்கான வரலாற்று நாயகர்


1866ஆம் ஆண்டு, ஜூலை 9 - பெரியார் மண்ணான தமிழ் நாட்டில் அவர் தோன்றிய நாள். ஞாயிறு மலர் வாசக அன்பர்களின் கைகளில் தவழும் இன்றைய நாள் ஜூலை 9 (2022) அந்த வரலாற்று நாயகர் பிறந்த நாள் என்பது வியப்புக்குரிய சிறப்பல்லவா? நான்கே வார்த்தைகளில் - ‘ஒப்பாரும் மிக்காரும் அற்ற தலைவர்‘ என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா தனது நூல் ஒன்றில் பானகல் அரசரைப் போற்றிப் புகழ்ந்து உள்ளார். ஒன்று சொன்னாலும், நன்று சொன்னார் ஆசிரியர்.

மாணவப் பருவம்:

பானகல் அரசர் 9.7.1866ஆம் நாளன்று காளஹஸ்தியில் பிறந்தார். அவருடைய மூதாதையர்கள் பானகல்லு என்னும் கிராமத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் “பானகல் அரசர்” என்று அழைக்கப் பட்டார். குண்டூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் பானகல்லு. பானகல் அரசரின் இயற்பெயர் ராமராய நிங்கார் என்பதே ஆகும். சென்னை தியாகராய நகரில் உள்ள பானகல் பூங்கா இவரது பெயரா லேயே விளங்கி வருகிறது. இளம் வயதி லேயே வீட்டில் தெலுங்கையும் சமஸ் கிருதத்தையும் கற்றுக் கொண்டவர் தனது 17ஆவது வயதில் தான் ஆங்கிலத்தைக் கற்கத் தொடங்கினார். சென்னை திரு வல்லிக்கேணியில் உள்ள இந்து உயர் நிலைப் பள்ளியில் படித்தவர், மாநிலக் கல்லூரியில் சேர்ந்து 1892ஆம் ஆண்டு சமஸ்கிருதத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.

பொது வாழ்வும் சமூகப் பணிகளும்:

கல்லூரி வாழ்க்கைக் காலத்திலேயே பொது மக்களுக்குச் சேவை செய்யும் ஆர்வம் ஏற்பட்டது அவருக்கு. முற் போக்கு இயக்கங்கள் பலவற்றோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். படிப்பு முடிந்ததுமே சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். சென்னை பல்கலைக் கழகத்தில் முக்கியமான நிர்வாகப் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. கல்வி சார்ந்த பல சீர்திருத்தங்கள் அவரால் ஏற் பட்டன. அவருடைய ஆலோசனைக ளுக்கு பல்கலைக்கழகம் மதிப்பளித்தது.

இந்தியாவின் ஒன்றிய நாடாளு மன்றத்திற்கு நில உரிமையாளர்கள் மற்றும் ஜமீன்தார்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு 1912 முதல் 1915 வரை உறுப்பினராக நீடித்தார். திராவிடர் சங்கத்தில் இணைந்தார். பார்ப்பனரல்லா தார் இயக்கத்திலும் பணியாற்றினார்.அவருடைய  தகுதியாலும் திறமையாலும் முன்னேறி பல பிரமுகர்களின் நன் மதிப்பைப் பெற்றார். அவரது ஒழுக்கமும், கண்ணியமும், நன்னடத்தையும் பலரை யும் கவர்ந்தன. முக்கியமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரும்பாடு பட்டார். நலி வுற்ற மக்களின் நல்வாழ்வுக்காக அர சாங்கம் தனியாக சில சிறப்புத் துறைகளை அமைக்க வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றார்.

அஞ்சாநெஞ்சத்துடன் போராட்டங்கள்:

டாக்டர் டி.எம்.நாயரும் சர்.பி.தியாக ராய செட்டியாரும் 1917ஆம் ஆண்டு துவக்கிய பார்ப்பனரல்லாதார் இயக்கத்து டன் இணைந்து அரும் பணியாற்றினார். இதனால் பல அவமானங்களையும் இன் னல்களையும் அவர் அனுபவிக்க நேர்ந் தது. ஆனால் சற்றும் சோர்வடையாமல், மனம் தளராமல், ஓர் உண்மையான ஜனநாயக பாதுகாவலராகவே இயங்கி பொதுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார் “ராஜா சாஹேப்” என்று வாஞ்சையுடன் அழைக் கப்பட்ட பானகல் அரசர் ராமராய நிங்கார். சமத்துவமும் சமூகநீதியும் அவருடைய உயிர்மூச்சாக இருந்தது? எதிர்ப்புகளைக் கண்டு துவண்டுப் போய்விடவில்லை அவர்.

மாண்ட்ஃபோர்டு சீர்திருத்த விதி முறைகளின்படி பார்ப்பனரல்லாதாருக்கு இடஒதுக்கீடுகள் கிடைக்கப் போராடி னார். (S.I.L.F.) என்னும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் செயற்குழு உறுப் பினராகி பார்ப்பனரல்லாதார் இயக்கத் திற்காக பல நற்செயல்கள் புரிந்தவர் அவர். 1917ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த முதல் பார்ப்பனரல்லாதார் மாநாட் டிற்கு தலைமை வகிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

பானகல் அரசர் ஆட்சியும் தந்தை பெரியாரும்

பானகல் அரசரின் ஆட்சித் தலைமையைப் போற்றிப் புகழ்ந்து தந்தை பெரியார் கூறியவை, அரசரின் மறைவையொட்டி ‘குடிஅரசு வார இதழில் தலையங்கமாக பிரசுரிக்கப்பட்டது. அரசியல் தலைமைக்கே இலக்கணமாக அவர் திகழ்ந்தார் என்பதை உருக்கமான அந்த தலையங்கத்தை இன்று படித்தாலும் புரிந்து கொள்ளலாம்.

பானகல் அரசர் சென்னை அரசாங்கத்தை மட்டுமின்றி தேவைப்பட்ட போதெல்லாம் இந்திய அரசாங்கத்தையும் பார்லிமெண்டையும் கூட மிரட்டி நடுங்க வைத்து வந்திருக்கிறார். பெண்கள் தேர்தல்களில் வாக்களிக்கக்கூடாது என்று இருந்த தடையை ஓர் அரசு ஆணை மூலம் நீக்கியவர் அவர். இதன் மூலம் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பெண்கள் 1921ஆம் ஆண்டு முதல் பெற்றார்கள். எல்லா சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில் உத்தியோகங்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் கல்லூரிகளில் இடம் பெற்று படிக்க வாய்ப்பளிக்கும் திட்டம் பானகல் அரசரின் முயற்சியால் தயாரிக்கப்பட்டது. இதன் பலனாகத் தான் பார்ப்பனர் அல்லாத சமூகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் ஓரளவுக்காவது இடம் கிடைக்கும் நிலை உருவாயிற்று.

வளர்ச்சியும் ஏற்றமும்:

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் S.I.L.F. ‘நீதிக்கட்சி’  (Justice Party) என்று அழைக்கப்பட்டது. பானகல் அரசரின் கட்சிப் பணிகள் தியாகராயரை மிகவும் கவர்ந்தன. 1919 ஆம் ஆண்டு தேர்தலில் பார்ப்பனரல்லாதார் பெருமளவில் வெற்றி பெற்று, திவான் பகதூர் சுப்பராயலு தலைமையில் முதல் அமைச்சரவை அமைந்தது. அவருடைய மறைவுக்குப் பின் பானகல் அரசர் 

முதல் அமைச்சரானார். அவரை ó Premier of Madras Presidency என்று அழைத்தார்கள். 1925ஆம் ஆண்டு தியாகராயர் மறைவைத் தொடர்ந்து பானகல் அரசர் நீதிக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதே சமயம், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தி லும முன்னணித் தலைவராக விளங் கினார்.

குறிப்பிடத்தக்க சாதனைகள்:

1918ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் நாள் திவான் பகதூர் பட்டம் அளித்து மாநில அரசு அவரை கவுரவித்தது. 1922ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் நாள் ‘ராஜா’ என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டு “பானகல் ராஜா” ஆனார். 1926ஆம் ஆண்டு K.C.I.E.  என்னும் உயர்ந்த பதவி அளிக் கப்பட்டது.

‘ராஜா சாஹேப்‘ சீர்படுத்தாத துறை ஏதுமில்லை என்றால் மிகையாகாது. தனது ஒவ்வொரு செயலிலும் தன் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியவர் அவர். அவரது தொடர் முயற்சிகளால் கிராமங்களில் மருத்துவ வசதி பெருகியது. சுகாதாரத் துறை வியக்கத்தக்க வளர்ச்சி கண்டது. கிராமங்களில் மருத்துவர்களை ஆர்வமுடன் பணிபுரியச் செய்ய அவர் களுக்கு ஊக்கத் தொகை கிடைக்க வழி வகுத்தார். தகவல் தொடர்பு வசதிகளும் போதுமான அளவு தண்ணீரும் இல்லாத ஊரகப் பகுதிகளில் அவை தடையின்றி கிடைக்க பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார்.

ஆதி திராவிடர்களின் நலனுக்காகவும் பாடுபட்டவர் பானகல் அரசர். அவரு டைய முயற்சியால் பல சலுகைகள் பெற்ற அந்த வகுப்பினரின் வாரிசுகள் இன்றும் அவருக்கு நன்றி செலுத்தி வருகின்றனர். இந்து அறநிலையச் சட்டம் அவருடைய மிகப்பெரிய சாதனை. இதன் மூலம் முறை கேடுகளும் லஞ்ச லாவண்யங்களும் வேறு பல ஊழல்களும் அடியோடு அழிந்தன.

குறையாத செல்வாக்கு:

1926ஆம் ஆண்டு தேர்தலில் பார்ப் பனரல்லாதார் கட்சி தோல்வியுற்றது. ஆனால் பானகல் அரசரின் செல்வாக்கு குறையவில்லை. புகழும் மங்காமல் இருந்தது. துவண்டு விடாமல் போராடி அக்கட்சிக்கு மீண்டும் உயிரூட்டியவர் பானகல் அரசர். எல்லோருக்கும் இனிய நண்பராக, வழிகாட்டியாக, ஆலோசக ராக விளங்கிய மாமனிதர் 1928ஆம் ஆண்டு, டிசம்பர் 16ஆம் நாளன்று மறைந்தார். இனிவரும் தலைமுறைகள் யாவும் அவருடைய உன்னதமான, கொள்கைகளைப் பின்பற்றி அவரைப் போலவே வீழ்ந்தாலும் உடைந்துப் போகாமல் நிமிர்ந்து நின்று சமத்துவத் திற்காகவும் சமூகநீதிக்காகவும் போராடப் போது உறுதி.

பானகல் அரசரின் தலைமையிலான நீதிக்கட்சியால் தாழ்த்தப்பட்டோரின் இழிவான பெயர்கள் நீக்கப்பட்டன. ‘பஞ்சமர்’ என்ற பெயர் நீக்கப்பட்டு ‘ஆதி திராவிடர்’ என்ற பெயர் மாற்றம் அவரு டைய தீவிர முயற்சியால் ஏற்பட்டது. 1922ஆம் ஆண்டு இந்த மாற்றம் அரசு ஆணை மூலம் அங்கீகரிக்கப்பட்டது.

பானகல் அரசர் காலத்தில் நீதிக்கட்சி ஆட்சியின்  சாதனைகள் - சிறப்புப் பணிகள்

1. துப்புரவுப் பணியாளர் வகுப்பிற்கு உதவ கூட்டுறவுச் சங்கங்கள்.

2. தாழ்த்தப்பட்டோருக்கு பொதுத் துறையில் உரிய இடங்கள்.

3. நலிந்த சமூகத்தினருக்கு பணி உயர்வு மற்றும் உயர் பதவி நியமனங்கள், வீட்டு மனைகள், சாலை வசதிகள், குடியிருப்புகள், புதிய பள்ளிகள், அவர்களுடைய நலனுக்காகப் பணி புரிய லேபர் கமிஷனர் (தனி அலுவலர்) நியமனம்.

4. தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் ஜாதி வாரி கணக்கெடுப்பு.

5. குறவர்களின் நல்வாழ்வுக்கான நடவடிக்கைகள்.

6. ஆதிதிராவிடர்களுக்கு நிலங்கள், கடன் வசதிகள், விவசாய நில ஒதுக்கீடு.

7. மீனவர் நலனுக்கென தனி அலுவலர் நியமனம்.

8. பி அண்ட் சி மில் - பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகள்.

9. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை.

10. இரவுப் பள்ளிகள் / கிராமங்களில் புதிய பள்ளிகள்.

மேற்கண்ட எல்லா சாதனைகளிலும் பானகல் அரசருக்கு பங்கு உண்டு. அவரோடு மற்றவர்கள் ஒருங்கிணைந்து பாடுபட்டார்கள் அவற்றுக்காக.

காலம் முழுவதும் அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்த பானகல் அரசரை இன்றையவிடுதலைஞாயிறு சிறப்பு மலர் மூலம் நினைவு கூர்வது நம் எல்லோருக்கும் பெருமை.

மருத்துவ சேர்க்கையில் சமஸ்கிருதமா?

பானகல் அரசரின் காலத்தில் தான் கல்வித் துறையிலும் சமூகத் துறையிலும் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட் டன. ஒரு மாணவன் மருத்துவக் கல்லூரி யில் சேர விரும்பினால் அவனுக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்கிற முறை அப்போது நடைமுறையில் இருந்தது. சமஸ்கிருதத்தில் புலமை பெற் றிருந்த பானகல் அரசரே இந்த முறையை உடைத்தெறிந்தார். மருத்துவத் துறை யிலிருந்து ஆங்கிலேயர்களின் ஆதிக் கத்தை அகற்றினார். முதன் முதலாக சென்னையில் இந்திய மருத்துவக் கல்லூரியை அமைத்த பெருமையும் பானகல் அரசரையே சாரும். அண்ணா மலை பல்கலைக்கழகம் உருவானதிலும் அவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. பானகல் அரசர் மற்றும் பல பிரமுகர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் 1929-1930ஆம் கல்வியாண்டில் அண்ணா மலை பல்கலைக்கழகம் தோன்றியது. 

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம்

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டமும் பானகல் அரசரின் பல சாத னைகளுள் ஒன்றாகும். கோவில்களின் சொத்தை சூறையாடி வந்த சுயநலக் காரர்களின் கொட்டம் இதன் மூலம் அடங்கியது. பானகல் அரசர் காலத்தில் நடைபெற்ற மற்றொரு முக்கியமான நிகழ்வு தாழ்த் தப்பட்ட மக்கள் எல்லாத் தெருக்களிலும் பொது இடங்களிலும் செல்லலாம் என்று அறிவித்த அரசாணை.


No comments:

Post a Comment