உலக மக்கள் தொகை நாள் உறுதிமொழி ஏற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 12, 2022

உலக மக்கள் தொகை நாள் உறுதிமொழி ஏற்பு

சேலம், ஜூலை 12  ஒவ்வொரு ஆண்டும் குடும்ப நலத்துறை சார் பாக ஜூலை 11-ஆம் நாள் உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப் பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு "குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை ஏற்போம்! நம் முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம் படைப்போம்" என்ற கருப்பொருளை மையமாக வைத்து உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுகிறது. 

இதை முன்னிட்டு, சேலம்  மாவட்ட ஆட்சியர்  கார்மேகம் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர் களும் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். 

பின்னர் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறியதாவது:- மக்கள் தொகை அதிகரிப்ப தால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்தும், குடும்ப கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும் பொதுமக்களிடம் தொடர்ந்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. 

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் பிறப்பு வரிசை விகிதம் கடந்த 3 ஆண்டுகளில் 12.8, 8.6, 7.5 சதவிகிதம் என்ற அளவில் குறைந்துள்ளது. 

அதனைத் தொடர்ந்து, பாலின விகிதம் கடந்த 3 ஆண்டுகளில் 880, 896, 916 என்ற அளவில் அதிகரித் துள்ளது. 

மேலும், நவீன தற்காலிக குடும்ப நல கருத்தடை முறைகளான அந்தரா கருத்தடை ஊசி மற்றும் சாயா கருத்தடை மாத்திரை ஆகிய வற்றின் பயன்பாடு நமது மாவட் டத்தில் சிறப்பாக செயல்படுத்தப் பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக, உலக மக்கள் தொகை தின உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் வாசிக்க அனைத்துத் துறை அரசு அலுவ லர்களும் பின் தொடர்ந்து ஏற்றுக் கொண்டனர். பின்னர், குடும்ப நலத் திட்ட விளக்க கையேட் டினை ஆட் சியர் கார்மேகம் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குநர்கள் வளர்மதி (குடும்ப நலம்), நளினி, பி.ஆர்.ஜெமினி (சுகா தாரப் பணிகள்), எஸ்.கணபதி (காச நோய்), விஜயவனிதா (தொழுநோய்) உட்பட அலுவலர்கள், மருத்து வர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment