மேட்டூர் அணைக்கு காவிரி நீர்வரத்து அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

மேட்டூர் அணைக்கு காவிரி நீர்வரத்து அதிகரிப்பு


மேட்டூர், ஜூலை 11-  கருநாடக அணைகளில் இருந்து  காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று (10.7.2022)  காலை முதல் மேட்டூர் அணைக்கு வரத் துவங்கியது. கருநாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம்  வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால்  கருநாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொட ர்ந்து அதிகரித்து வருகிறது. இரு அணைகளும் நிரம்பும் நிலையில் இருப்பதால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. ஞாயிறன்று காலை முதல் மேட்டூர் அணைக்கு வரத் துவங்கியது. வினாடிக்கு 2,141 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து ஞாயிறன்று காலை வினாடிக்கு 3149 கன அடியாக அதிகரித்து உள்ளது. நீர் வரத்து அதிகரித்தாலும் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளது. இதனால்  மேட்டூர் அணை யின் நீர்மட்டம் 98.91 அடியிலிருந்து 98.29அடியாக  குறைந்துள்ளது. அணை யில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 62.64 டி.எம்.சியாக உள்ளது. கருநாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1 இலட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வெள்ள அபாய எச்சரிக்கை 

காவிரியில் நீர் திறப்பு அதிகரித்து உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.  கர்நாடக  அணைகளில் இருந்து காவிரிக்கு வரும் நீரின் அளவானது  ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கே.ஆர்.எஸ், அணைக்கு மணிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண் டிருக்கிறது, கபினி அணைக்கு 27 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக் கிறது. இதேநிலை நீடித்தால்  காவிரிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவானது மேலும் அதிகரிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:

Post a Comment