செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 7, 2022

செய்திச் சுருக்கம்

கண்டறிதல்

புற்றுநோய்  மரபணுக்களை எளிதாக கண்டறிதலுக்கான செயற்கை நுண்ணறிவு அடிப் படையிலான 'பிவோட்' என்ற கருவியை சென்னை அய்.அய்.டி. ஆய்வுக் குழுவினர் உருவாக்கி யுள்ளனர்.

தேர்ச்சி

பொறியியல் பருவத் தேர்வில் முதலாமாண்டு மாணவர்கள் 38 சத வீதம் பேர் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.

அபராதம்

சென்னையில் மழைநீர் வடி கால் கட்டுமானப் பணியை உரிய நேரத்தில் முடிக்காத 8 ஒப்பந்த தாரர்களுக்கு ரூ.2.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் பேடி தெரிவித்துள்ளார்.

காப்பீட்டில்

வாகனக் காப்பீட்டில் கூடுதல் சேவைகளை இணைத்து வாடிக் கையாளர்களுக்கு வழங்க இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

விடுவிப்பு

வருவாய் பற்றாக்குறை ஏற்பட் டுள்ள 14 மாநிலங்களுக்கு நான் காவது அட்ட மானியமாக ரூ.7,183 கோடியை விடுவித்துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

திட்டம்

காற்று மாசுவைக் குறைக்கவும், எரிபொருள் சிக்கன திறன்மிகுந்த வாகனங்களை அறிமுகப்படுத்தும் நோக்கிலும் எரிபொருள் சிக்கன தர நிலையை வரும் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

வலியுறுத்தல்

பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு சமையல் எண்ணெய் வகைகளின் சில்லறை விற்பனை விலையை குறைக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களிடம் ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது.

நீட்டிப்பு

கச்சா பருத்தி இறக்குமதி மீதான சுங்க வரி விலக்கு சலு கையை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment