ஆடி மாதத்தில் கழுதைக்கு கல்யாணம் காசு பார்க்கும் பார்ப்பனர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 23, 2022

ஆடி மாதத்தில் கழுதைக்கு கல்யாணம் காசு பார்க்கும் பார்ப்பனர்கள்

காவடியாத்திரை செல்லும் முன்பு ஒரு குழுவினர் 
கழுதைக்கு திருமணம் செய்துவைக்கும் காட்சி.

அசாட் மற்றும் ஷ்ராவன் மாதங்களில் திருமணம் உள்ளிட்ட நல்ல செயல்கள் எதையுமே செய்யமாட்டார்கள்.  இந்த மாதங்களில் காவடியாத்திரை என்ற பெயரில் உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், அரியானா மாநிலங்களில் இருந்து கால்நடையாக அரித்துவார், வாரணாசி, உள்ளிட்ட ஊர்களில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்வார்கள் சுமார் 40 நாட்கள் நடந்து செல்லவும், திரும்பவர  இரண்டு மாதங்களும் கழிந்துவிடும். 

 இந்த இரண்டு மாதமும் பார்ப்பனர்கள் பிழைக்க என்ன செய்வார்கள்? அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டார்கள். அதாவது காவடியாத்திரை செல்பவர்கள் கழுதைக்கு திருமணம் செய்துவைத்து புறப்பட்டால் பயணம் வெற்றிகரமாக முடியும் என்று வருவாய் இழந்த பார்ப்பனர்கள் புரளியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். 

 அதிலிருந்து யாத்திரை செல்லும் எல்லா குழுக்களும் எங்கிருந்தோ ஆண் - பெண் கழுதையை இழுத்துவந்து பார்ப்பனரை அழைத்து அனைத்து வகையான சடங்குகளையும் செய்து பார்ப்பனருக்கு தட்சணை வைப்பார்கள். 

பார்ப்பனர்கள் தட்சணையையும் பெற்று கொண்டு திருமணம் செய்து வைத்ததற்கு கூலியாக பணமும் பெற்றுக்கொள்வார்கள்.   ஜூலை - ஆகஸ்ட் இரண்டு மாதங்களும் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தே பெரும் பணம் பார்த்துவிடுவார்கள்.

No comments:

Post a Comment