ஜப்பான்வாழ் தமிழர்கள் சார்பில் தமிழர் தலைவருக்கு வாழ்த்துகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

ஜப்பான்வாழ் தமிழர்கள் சார்பில் தமிழர் தலைவருக்கு வாழ்த்துகள்

தாங்கள் 60 ஆண்டுகளாக மேற்கொண்டிருந்த பணிகள் சமூக நீதியின் தூண்களாக நின்று தமிழ் நாட்டைப் பாதுகாத்து வருகின்றன. மேன்மேலும் தங்கள் தொண்டு வளர்ந்து இயக்கத்துக்கு உரமூட்ட ஜப்பான்வாழ் தமிழர்களின் சார்பில் வாழ்த்துகள். நன்றி!

ச. கமலக்கண்ணன் (Kamal <japanesekamal@gmail.com>)

ரா. செந்தில்குமார் (<senthil_rethan@yahoo.com>)

பார்ப்பனப் புரட்டு

'விடுதலை' நாளிதழ் ஜுலை 2 ஞாயிறு மலரில் வெளிவந்த ' அம்பேத்கர் பார்ப்பனப் பெயரா? கட்டுரை வாசித்தேன். மகாராட்டிராவில் அம்பாதவே என்ற கிராமத்தின் சுருக்கம் அம்பேத் என்பதாகும். அண்ணல் அவர்களைப் பள்ளியில் சேர்க்கும் போது பீமாரவ் ராம்ஜி அம்பேத்கர் என பதிவு செய்துள்ளனர் என்ற வரலாற்று உண்மை செய்தியை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உணர்த்திய தோடு,பார்ப்பனர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததும் பாராட்டுக்குரியது. 

பார்ப்பனர்களைப் பொறுத்தவரை, தங்களுக்கு  பாதகம் என்றால் உண்மை நிகழ்வுகளை மழுங்கடிக்க, மறைக்க செய்வது, தங்களுக்கு சாதகம் என்றால் பொய்யான நிகழ்வுகளை மறுபடியும் தொடர்ந்து எழுதி, பேசி வருவது தான் பார்ப்பனர்களின் குணம். அந்த வகையில் தான் அம்பேத்கர் என்பது பார்ப்பன ஆசிரியர் பெயர் என்ற வரலாற்று புரட்டு செய்தி. அம்பேத்கர் என்ற பெயர்கொண்ட பார்ப்பான் எங்கே என்ற வினா அருமை. 

பார்ப்பனர்களில்  அம்பேத்கர் என்ற பெயர் இருந்திருந்தால், ஆகாயத்திற்கும், பூமிக்கும் குதித்திருப்பார்கள். குலக் கல்வியை கொண்டு வந்த ஆச்சாரியாரை மூதறிஞர் என தூக்கிக் கொண்டாடியதைப் போல. அம்பேத்கர் என்ற பெயரில் பார்ப்பனர் இருந்தார் என அவர்களால் அழுத்தமாக சொல்ல முடியவில்லை . இதிலிருந்தே பார்ப்பனர்களை தெரிந்து கொள்ளலாம்.

அம்பேத்கர் அவர்கள் உயர்ந்த நிலையை அடைந்த பிறகே தமது வழிகாட்டி ஆசிரியர் அம்பேத்கர் பெயரை இணைக்க முடியும், ஆனால் சிறுவயதில் பள்ளி இணைப்பின் போதே அம்பேத்கர் என்ற பெயர் உள்ளதே என்ற வினாவுக்கு பார்ப்பனர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். அம்பேத்கர்பள்ளியில் சேர்க்கும் போதே அவரது வகுப்பு ஆசிரியர் எப்படி தனது பெயரைப்போட ஏற்றுக் கொண்டார் என்ற வினா அருமை. 

பெரியார் என்ற பெயரை பார்ப்பனர்கள் எப்படி தங்கள் குழந்தை களுக்கு சூட்டிக் கொள்ள இயலாதோ, அது போன்று தான் அம்பேத்கர் என்ற பெயர் பார்ப்பனர் பெயராக இருக்கமுடியாது. சூத்திரர்களின் முத்திரைகள் அவர்கள். பார்ப்பனர்கள் என்ற கூண்டுக்குள் பெரியார், அம்பேத்கர் அவர்களை ஒரு போதும் அடைத்து விடமுடியாது.பெரியார் என்பவரும் ஒருவர் தான், அம்பேத்கர் என்பவரும் ஒருவர்தான். நாணயத்தின் இருபக்கங்களாக திகழ்ந்து ஒரு நாணயமாக திகழ்கிறார்கள். காலம், காலமாக ஒடுக்கப்பட்ட மக்களே அம்பேத்கர் என்பது பார்ப்பன ஆசிரியர் பெயர் என்று எண்ணிய வேளையில் அது ஊரின் பெயர் என உண்மைசெய்தியை வெளியிட்ட 'விடுதலை' நாளிதழின்  செயல் பாராட்டுக்குரியது. வேறு எந்த ஏடும் வெளியிடாத செய்தியை வெளியிட்டு உண்மையை உணர்த்திய ' விடுதலை' க்கு உளமார்ந்த நன்றிகள்.  

மு.சு. அன்புமணி,  

மதுரை - 625020 

உரம் இடுவோம் 

சிரம் நிமிர்வோம்

ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்களுக்கு வணக்கம், திருமங்கலம் நகரில் திராவிடர் கழகம் ஒளிவிடுவதற்கு,  கல்வி வள்ளல் அய்யா பே. தேவசகாயம் அவர்களோடு துணைநின்ற பெருமை என்னுடையது.வறுமையிலும் பெருமையாக, கடமையிலும் உரிமையாக 'விடுதலை' நாளிதழை தொடர்ந்து விலை கொடுத்து நான் வாங்கி வருவது எனக்கு பெருமகிழ்ச்சி. 42 ஆண்டுகளுக்கு முன்பே திருமங்கலம் நகரில் 22:6:1980 அன்று கழகத் தோழர்கள் விடுதலை நாளேட்டை காசு கொடுத்து வாங்கி படிக்க வேண்டும், 'ஓசி'யில் படிக்க கூடாது என கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினேன். கழகத் தோழர்களால் ' விடுதலை'சுந்தரராசன் என பாராட்டு பெற்றேன். திருமங்கலம் நகரில் தந்தை பெரியார் அவர்கள் முழு உருவச்சிலை அமைத்த கே.டி.ஓ.ஏஸ். முத்து கருப்பன், ஏ.பி.ஆர். சுந்தர பாண்டியன் இவர்களோடு இணைந்து அய்யா சிலை நிறுவ பணியாற்றியது, திருமங்கலத்தில் வழி நடைபிரச்சார துவக்க கூட்டம் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையில் வரவேற்புரை, 'வள்ளி பிராமணாள் மெஸ்' என்பதன் பெயரை மாற்றிய பெருமை, நுழைவுத் தேர்வு எரிப்பு போராட்டம், உள்பட பல்வேறு கழக நிகழ்வுகளில் எனது பங்களிப்பு உண்டு. திராவிடர் கழகத்தின் நீண்ட கால தொண்டனாகிய நான் ''விடுதலை' படிப்பதை இன்றும் பெருமையாக கருதுகிறேன். 

மதுரையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியாத நிலையில் எனது புதல்வன் மு. சு. அன்புமணி யிடம் 'விடுதலை' சந்தாவை ஆசிரியர் அவர்களிடம் வழங்க செய்தேன். தற்பொழுதும் 'விடுதலை'  என் கரங்களில் தவழ்கிறது, என்னை தாலாட்டுகிறது. 

மனிதன் மான உணர்ச்சிகள் பெற காரணமான அய்யா அவர்களின் போராயுதமான 'விடுதலை'யின் ஆசிரியராக 60 ஆண்டுகள் பணியில் தொடர்ந்து ஆசிரியர் அவர்கள்சிறக்க, நாமும் நமது பணியை சிறகாக விரித்து ' விடுதலை' சந்தா பணியை அதிகரிக்க செய்வோம். 

அய்யா அவர்களின்பகுத்தறிவு கொள்கையை நேசிக்கும் நெஞ்சங்களான நாம், அனைத்து உள்ளங்களையும் ' விடுதலை' வாசிக்கும் முறையை நிறைவேற்றுவோம். நமது பணிக்கு ஓய்வு என்பதே இல்லை, சமுதாய தொண்டு புரிந்தவர்கள் எப்போதும் மறைவதில்லை என்று  உரக்க சொல்லி அய்யா வின் கொள்கை என்றும் சிகரத்தில் இருக்க கரம் சேர்ப்போம், 'விடுதலை' உரம் இடுவோம், சிரம் நிமிர்வோம். 

எங்களுக்கு நீங்க,  உங்களுக்கு நாங்க 

என்று சொல்லி ' விடுதலை' சந்தாவை அதிகரிக்க செய்வோம். வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு.  



No comments:

Post a Comment