சிதம்பரம் நடராஜர் கோயிலில் மோசடிகள்! மோசடிகள்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 23, 2022

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மோசடிகள்! மோசடிகள்!!

பொதுமக்கள்-பக்தர்கள் 14,098 புகார்கள்

சென்னை, ஜூலை 23 கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத் தினர்மீது பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. பொதுவாக, தீட்சிதர் கள், பக்தர்களை அவமானப்படுத்துவதாக வும், திருச்சிற்றம்பலம் மேடையில் ஏறி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், குறிப்பாக, கோயிலில் ஊழல் உள்ளிட்டவை  நடைபெறுவதாகவும், பக்தர்களை அவ மரியாதை செய்வது போன்ற பல்வேறு குற்றசாட்டுகள் தீட்சிதர்கள் மீது  உள்ளன.

திருச்சிற்றம்பல மேடையில்

 கடந்த திமுக ஆட்சியில் இதுபோன்ற புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், அப்போதைய முதலமைச்சர் கலைஞர்  மேற்கொண்ட நடவடிக்கையின் கீழ் பல்வேறு முறைகேடுகள் தவிர்க்கப்பட்டன.

அதன்பின், உச்சநீதிமன்றம் உத்தரவுப் படி மீண்டும் சிதம்பரம் கோயில் தீட்சிதர் கள் வசம் சென்றது. இதனால்,தீட்சிதர்களின் அத்துமீறல் பல்வேறு சமயங்களில் அதி கரித்து வந்தது. சமீபத்தில், தீட்சிதர்கள் தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணைத் தாக்கிய தாக காவல் நிலையம் வரை புகார் சென்றது. இதனால், இக்கோயில் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அமைப்பினர், தன்னார்வலர்கள், சிதம்பரம் பொதுமக்கள் என போராட்டத்தில் ஈடு பட்டனர். அதனடிப்படையில், நீதிமன்ற உத்தரவுப்படி, காவல்துறை பாதுகாப்புடன் திருச்சிற்றம்பலம் மேடையில் ஏறி பக்தர் கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப் பட்டது.

14,098 புகார்கள்

 பின்னர், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 7, 8 ஆகிய தேதிகளில் அறநிலையத் துறை சார்பில் 5 பேர் கொண்ட சிறப்பு அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோயிலின் வரவு - செலவு கணக்குகளை காட்ட வேண்டும் என்றும், 2 நாட்கள் ஆய்வு நடத்த உள்ளதாகவும் அறநிலையத்துறை அதிகாரிகள் குழு தீட்சிதர்களுக்கு தாக்கீது அனுப்பியிருந்தது. அதன்படி சிறப்பு அதிகாரி சுகுமாரன் தலைமையிலான குழு வினர் ஆய்வு மேற்கொண்டபோது, தீட்சி தர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. வரவு - செலவு கணக்குகளையும் காட்ட மறுத்த அவர்கள், நீங்கள் சட்ட ரீதியான குழு இல்லை என்றும், உச்சநீதிமன்ற உத்தரவுப் படி அமைக்கப்பட்ட குழுவாக இருந்தால் வரவு - செலவு கணக்குகளை ஒப்படைப் போம், இல்லையேல் நிர்வாக கணக்குகளை காட்ட முடியாது என்றும் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.

 இதனிடையே சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் குறித்து விசாரணை நடத்த பொதுமக்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி அறிவித்தார்.

அஞ்சல் மூலமாகவும் இணையம் மூலமாகவும் வந்த கருத்துகளின் அடிப் படையில் மொத்தம் 19,405 புகார் மனுக்கள் பெறப்பட்டன. மொத்த மனுக்களில் 14,098 மனுக்கள் கோயிலில் புகார்கள் இருப்பதை உறுதி செய்தது. 

ரூ.10 ஆயிரம் கொடுத்தால் பிரசாதம்

சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்த மான புகார்கள் என்னென்ன?

* சிதம்பரம் நடராஜர் கோயிலில் ரூ.10,000 கொடுத்தால் பிரசாதம் வீடு தேடி வரும் என ரசீது இன்றி வசூல் செய்வதாகப் புகார். 

* ஆண்டு முழுவதும் வீட்டுக்கு பிர சாதம் அனுப்ப ரூ.2,500 வசூலித்து ரசீது வழங்கப்படவில்லை.

* கோயிலுக்கு பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைக்கு ரசீது வழங்கப்படுவதில்லை.

* கோயிலில் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பிய தீண்டாமை சுவரை அகற்ற கோரிக்கை

* கோயிலுக்கு வருபவர்களைத் தரக் குறைவாகப் பேசி அவமதிப்பதாவும், பெண்களை மரியாதைக் குறைவாக நடத் துவதாகவும் புகார்.

* சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜை உரிய நேரத்தில் நடைபெறுவதில்லை.

* சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம் அனுமதிக்கப்படுவ தாகப் புகார்.

* நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங் கால் மண்டபத்தை நட்சத்திர விடுதிபோல் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு.

* ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடம்பர திருமணத்தின் போது தொழிலதிபர்கள் காலணியுடன் சென்றதாக புகார்.

* சிதம்பரம் நடராஜர் சிலைக்கு அருகே இருந்த நந்தனார் சிலையை தீட்சிதர்கள் அப்புறப்படுத்தி விட்டதாகப் புகார்.

* தில்லை கோவிந்தப்பெருமாள் கோயி லில் எந்த விழாவும் நடத்தவிடாமல் தீட்சிதர்கள் தடை விதித்துள்ளதாகப் புகார்.

ஆண்டாள் சிலை எங்கே? எங்கே?

* தீட்சிதர்கள் ஆண்டாள் சிலையை எடுத்துச் சென்று மறைத்து வைத்துள்ள தாகக் குற்றச்சாட்டு.

* பைரவர் சன்னதி அருகே சுரங்கத்தில் இருந்து பல கோடி மதிப்பிலான ஆபர ணங்களை தீட்சிதர்கள் எடுத்து சென்ற தாகப் புகார்.

* பக்தர்களால் வழங்கப்படும் தங்கம், வெள்ளி பணத்தை ரசீது தராமல் தீட்சி தர்கள் எடுத்துக் கொள்வதாகப் புகார்.

* குறிப்பிட்ட நேரத்திற்கு தேரோட் டமோ, ஆருத்ரா தரிசனமோ நடத்தாமல் பக்தர்களை பல மணிநேரம் காக்க வைப்பதாகப் புகார்.

* நந்தனார் நுழைந்த தெற்கு கோபுர வாயிலை அடைத்து தீண்டாமையை பின்பற்றுவது 

என பல முக்கிய புகார்கள் அறநிலையத் துறைக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.

அதிகாரிகளிடம் கோணல் - மாணலான பதில்

 மேலும்  கடந்த 19ஆம் தேதி சிதம்பரம் நடராஜர் கோயிலில் வருகிற 25 ஆம் தேதி நகை சரிபார்ப்பு ஆய்வுக்காக வருவதாக கூறி தீட்சிதர்களுக்கு இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். அதற்கு கோயில் தீட்சி தர்கள் பதில் கடிதம் ஒன்றை அனுப்பி யுள்ளனர்.

அதில், தங்கள் தரப்பு ஆட்சேபணை அனுப்புவதற்காக தற்போது பரிசீலனையில் உள்ளதாகவும், தற்பொழுது மிகக் குறுகிய கால அவகாசத்திற்குள் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நகைகள் ஆய்விற்காக வரும் 25 ஆம் தேதி அன்று வருவதாக தங்களிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் குறிப்பிட் டுள்ளதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக நடராஜர் கோயில் சம்பந்தமாக தாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை கூர்ந்து நோக்கும் போது தாங்கள் ஆய்வுக்கு முன்பே ஏற்கெனவே முடிவு செய்து ஆய் வுக்கு வர உள்ளதாக தாமதமாகத் தகவல் அனுப்பி உள்ளீர்கள் என்று சந்தேகப் படுகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment