நிலாவில் அணு மின்சாரம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 7, 2022

நிலாவில் அணு மின்சாரம்!

அமெரிக்கா மீண்டும் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பத் தயாராகிறது. அதுமட்டுமல்ல, சந்திரனில் ஆய்வு மய்யங்களை கட்டவும் திட்டமிட்டுள்ளது. அதற்கு சூரிய மின்சாரம் மட்டும் போதாது. எனவே, நிலாவில் அணு மின் நிலையத்தை அமைக்கஉள்ளது.

அண்மையில் அமெரிக்க விண்வெளி அமைப்பான 'நாசா' மூன்று அணு உலை மாதிரிகளைத் தயாரிக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. 

வரும் 2030இல் இந்த அணு உலை மாதிரிகளில் ஒன்றை, நிலாவில் நிறுவி நாசா சோதிக்கும்.

நிலாவில் நிரந்தர மனித முகாம்களை அமைக்கவும், அங்கிருந்து செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பவும் நிறைய மின்சாரம் தேவை. அதற்கு, குறைந்த எரிபொருளில், அதிக அளவு மின்சாரத்தை தயாரிக்க அணு உலை மட்டுமே தோதாக இருக்கும் என நாசா கருதுகிறது. 

மேலும், 40 கி.வா., மின்சாரம் தயாரிக்கும் ஒரு அணு உலை, சிறிய

தாகவும், எடை கம்மியாகவும் இருக்கும். இதனால், பூமியிலிருந்து நிலாவுக்கு எளிதாக அனுப்பலாம். 

தவிர, அணு உலைகள் 10 ஆண்டுகள் வரை இயங்கும்.எனவே தான், நிலாவுக்கும், செவ்வாய்க்கும் மனிதர்களை அனுப்ப அணு மின்சாரத்தை நாடுகிறது நாசா.


No comments:

Post a Comment