விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 17, 2022

விடுதலை சந்தா

மறைமலை நகர் பெரியார் பற்றாளர் மு.அரங்கநாதன் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி செயலாளர் தே.தென்னவன் 10ஆண்டு விடுதலை சந்தா வழங்கினார்.பெரியார் மனிதநீதி பேரவைத் தலைவர் மறைமலை நகர் ந.பார்த்தசாரதி ஓர் ஆண்டு விடுதலை சந்தா வழங்கி பத்து சந்தா ரசீது பெற்றுக் கொண்டார். 

தருமபுரி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பீம. தமிழ்பிரபாகரனிடம் பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்டச் செயலாளர் சந்தப்பட்டி தீ.சிவாஜி 10 ஆண்டு விடுதலை சந்தா புத்தகம் ஒன்றை வழங்கினார்.

திண்டுக்கல் மண்டல தலைவர் மு.நாகராஜனிடம் ஒட்டன் சத்திரம் தோழர்கள்  கார்த்திகேயன், அய்யா மணி, காளிமுத்து, திண்டுக்கல் வடமதுரை தோழர்கள் செந்தில்குமார், மகேஸ்ராஜா ,ஆகியோரது சார்பில் விடுதலை சந்தா வழங்கப்பட்டது. உடன் தொ.பே. துணை செயலாளர் செல்வம் உள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த வழக்குரைஞர் மணிகண்டன்  உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான ‘விடுதலை'க்கு அரையாண்டு சந்தா வழங்கினார். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராஜதுரை, கழக மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.சக்தி சரவணனிடம் ஓராண்டு விடுதலை சந்தா  வழங்கினார். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்  கணேசன் கழக ஒன்றிய செயலாளர் இரா.ஜெயப்பிரகாசிடம் விடுதலை ஓர் ஆண்டு சந்தா வழங்கினார். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அக்கரகாரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் கழக மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.சக்தி சரவணனிடம் விடுதலை நாளேட்டிற்கு  அரையாண்டு சந்தா  வழங்கினார்.

கிருஷ்ணகிரி ராஜீவ் காந்தி கல்லூரி தாளாளர் வி. வி. மூர்த்தி ஓராண்டு விடுதலை சந்தாவை  மாவட்ட செயலாளர் கா. மாணிக்கத்திடம் வழங்கினார். உடன் மாவட்ட துணைச் செயலாளர் வ.ஆறுமுகம். கிருஷ்ணகிரி எல்.அய்.சி. அலுவலர் சுந்தர் ஓராண்டு விடுதலை சந்தாவை  மாவட்ட செயலாளர் கா. மாணிக்கத்திடம் வழங்கினார். உடன் நகர தலைவர் கோ.தங்கராசன். கிருஷ்ணகிரி மாவட்ட மதிமுக இலக்கிய அணி அமைப்பாளர் மு.சந்திரன் அரையாண்டு சந்தாவை நகர தலைவர் கோ. தங்கராசனிடம் வழங்கினார். கிருஷ்ணகிரி ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியர் அணி செயலாளர் ராம்சந்தர் ஓராண்டு சந்தா வழங்கியதுடன் ஒரு இரசீது புத்தகம் பெற்றுக் கொண்டார். கிருஷ்ணகிரி  மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் என். அஸ்லாம் ரஹ்மான் செரிப் ஓராண்டு விடுதலை சந்தாவை வழங்கினார்.

காரைக்கால் திருப்பட்டினம் ஆசிரியர். ஞா.அருண் ஓராண்டு சந்தாவை திருவாரூர் மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி யிடம் வழங்கினார்.

ஆவடி மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி

சிதம்பரம் மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி

ஆசிரியர் ஜவகர் நாராயணசாமியிடமிருந்து விடுதலை அரையாண்டு சந்தாவை மாவட்ட கழக துணைத் தலைவர் மழவை கோவி பெரியார் தாசன் பெற்றார். 15.7.2022 அன்று தலைமை ஆசிரியர் அ.செங்குட்டுவனிடம் ஓராண்டு விடுதலை சந்தா மற்றும் அ.சங்கரிடமிருந்து அரையாண்டு சந்தாவையும், சிதம்பரம் மாவட்ட கழக துணைத் தலைவர் மழவை கோவி பெரியார் தாசன் பெற்றார். உடன் மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் சிற்பி சிலம்பரம். சிதம்பரம் மாவட்ட மேனாள் அமைப்பாளர் கு.தென்னவன், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் துரை.செயபால் ஆகியோர் உடன் உள்ளனர். பு.முட்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயசீலன், மஞ்சக்குழி ஊராட்சி மன்றத் தலைவா சற்குருநாதன் ஆகியோர் விடுதலை சந்தா வழங்கினர்.

16.7.2022 அன்று மாதவரம் தொகுதி திராவிட முன்னேற் றக் கழக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். சுதர்சனம் அவர் களை சந்தித்து 20 விடுதலை சந்தாக்களுக்கான ரசீது புத்தகத்தை, கும்மிடிப்பூண்டி மாவட்டம் சார்பில் சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன், புழல் ஒன்றிய செயலாளர் உதய குமார் ஆகியோர் வழங்கினர்.


No comments:

Post a Comment